பஞ்சாப் போலீசார் மீது தாக்குதல்

Added : அக் 10, 2019
Advertisement

சுபதிண்டா : ஹரியானாவில் கிராமம் ஒன்றில், சோதனையில் ஈடுபட்ட, பஞ்சாப் போலீசார் மீது, பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர்.

ஹரியானாவில், முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கே, போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக, ஒருவரை கைது செய்ய, தேசு ஜோதா கிராரமத்துக்கு, பஞ்சாப் மாநிலம், பதிண்டாவை சேர்ந்த போலீசார் சென்றனர். சம்பந்தப்பட்ட நபரை பிடிக்க, அவர்கள் சோதனையில் ஈடுபட்டனர். இதற்கு, தேசு ஜோதா கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாப் போலீசாரை தடுத்தனர். போலீசாருக்கும், கிராம மக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கிராம மக்கள், போலீசாரை முற்றுகையிட்டு, தாக்குதல் நடத்தினர்.

மேலும், பேசாலீசார் வந்த வாகனத்துக்கும் தீ வைத்தனர்.நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில், துப்பாக்கி குண்டு பாய்ந்து, ஜகா சிங் என்பவர் இறந்தார். இதற்கிடையே தகவல் அறிந்து வந்த ஹரியானா போலீசார், கிராம மக்களிடமிருந்து பஞ்சாப் போலீசாரை மீட்டனர்.கிராம மக்கள் நடத்திய தாக்குதலில், ஐந்து போலீசார் படுகாயம் அடைந்தனர். இவர்கள் பதிண்டாவில் உள்ள, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து, தேசு ஜோதா கிராமத்தில் பதற்றம் நிலவுகிறது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X