அரசியல் செய்தி

தமிழ்நாடு

சீன அதிபர் வருகை: இ.கம்யூ., வரவேற்பு

Added : அக் 10, 2019 | கருத்துகள் (3)
Advertisement

சென்னை: 'தமிழகம் வரும் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரை நெஞ்சார வரவேற்கிறோம்' என, இ.கம்யூ., மாநில செயலர் முத்தரசன் கூறியுள்ளார்.அவரது அறிக்கை: தமிழகத்தின் சிற்ப கலையை எடுத்துக் காட்டும் மாமல்லபுரத்தில், இந்திய பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், பேச்சு நடத்த உள்ளனர். இந்தியரும், சீனரும் சகோதரர்கள் என்ற முழக்கம், இரு நாடுகளுக்கும் புதிதல்ல. சீனா நமக்கு நெருக்கடி கொடுக்கும் என்று அச்சுறுத்தியே, மேலைநாடுகள் பக்கம் நெருக்கம் ஏற்படுத்தப் பட்டது. அதனால், இன்று நம் நாடு பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. 'இந்தியா நம் நட்புறவு நாடு; இரு நாட்டு நலன்களும், ஒரு சேர பாதுகாக்கப்படும்' என்ற உறுதியை, சீனா வழங்க வேண்டும். இருநாடுகளின் உறவில், ஒரு புதிய மாற்றத்தை உருவாக்க வேண்டும்.பேச்சு நடத்த, தமிழகம் வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஆகியோரை, நெஞ்சார வரவேற்கிறோம்.இவ்வாறு, முத்தரசன் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
10-அக்-201906:11:30 IST Report Abuse
blocked user வாவ்.. கோ பேக் சொன்னது இதே வாய்தான்…
Rate this:
Share this comment
Cancel
Vaduvooraan - Chennai ,இந்தியா
10-அக்-201900:58:06 IST Report Abuse
Vaduvooraan நம்ம ஊர் கம்யூனிஸ்டுகளின் கடைசி நம்பிக்கை சீனா ஏனென்றால் சரக்கு கொள்முதல் செய்த இடம் என்பதால் நிறைய வாசகர்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. 1962 சீனப்படையெடுப்புக்கு சற்று முன்னால் டாங்கே, ராஜேஸ்வர் ராவ் போன்ற முக்கியமான தலைவர்கள் சத்தம் போடாமல் எல்லை தாண்டி சீனாவில் நுழைந்து மாவோவை ரகசியமாக சந்தித்து இந்தியா மீது படையெடுப்பது உறுதி என்றால் ஐந்தாம் படை வேலை செய்து சீனாவுக்கு உதவுவதாக வாக்களித்து விட்டு வந்தது அன்றைய உள்துறை அமைச்சர் குல்ஸாரி லால் நந்தாவினால் ஒப்புக் கொள்ளப்பட்டது. நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டதாக நினைவில்லை
Rate this:
Share this comment
M.S.Lakshminarayanan - coimbatoare,இந்தியா
10-அக்-201907:07:43 IST Report Abuse
M.S.Lakshminarayananவெளிப்படையாகவே மேற்கு வங்காளத்தில் போஸ்டர் அடித்து மா சி துங் இந்தியா மீது படை எடுத்ததை வரவேற்ற கொடிய தேச துரோகிகள் இந்த பாழாய்ப்போன கம்யூனிஸ்ட்கள். இந்த விவரங்கள் எத்தனை பேருக்கு தெரியும். நேரு வே இவர்களை/இந்த கட்சி ஐ , தடை செய்தார் என்பது எவ்வளவு பேருக்கு தெரியும்?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X