சீன அதிபர் வருகை: இ.கம்யூ., வரவேற்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சீன அதிபர் வருகை: இ.கம்யூ., வரவேற்பு

Added : அக் 10, 2019 | கருத்துகள் (3)
Share

சென்னை: 'தமிழகம் வரும் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரை நெஞ்சார வரவேற்கிறோம்' என, இ.கம்யூ., மாநில செயலர் முத்தரசன் கூறியுள்ளார்.அவரது அறிக்கை: தமிழகத்தின் சிற்ப கலையை எடுத்துக் காட்டும் மாமல்லபுரத்தில், இந்திய பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், பேச்சு நடத்த உள்ளனர். இந்தியரும், சீனரும் சகோதரர்கள் என்ற முழக்கம், இரு நாடுகளுக்கும் புதிதல்ல. சீனா நமக்கு நெருக்கடி கொடுக்கும் என்று அச்சுறுத்தியே, மேலைநாடுகள் பக்கம் நெருக்கம் ஏற்படுத்தப் பட்டது. அதனால், இன்று நம் நாடு பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. 'இந்தியா நம் நட்புறவு நாடு; இரு நாட்டு நலன்களும், ஒரு சேர பாதுகாக்கப்படும்' என்ற உறுதியை, சீனா வழங்க வேண்டும். இருநாடுகளின் உறவில், ஒரு புதிய மாற்றத்தை உருவாக்க வேண்டும்.பேச்சு நடத்த, தமிழகம் வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஆகியோரை, நெஞ்சார வரவேற்கிறோம்.இவ்வாறு, முத்தரசன் கூறியுள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X