அரசியல் செய்தி

தமிழ்நாடு

'தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் உள்ளாட்சி தேர்தல் நடக்கும்'

Added : அக் 10, 2019 | கருத்துகள் (33)
Advertisement
 'தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் உள்ளாட்சி தேர்தல் நடக்கும்'

திருநெல்வேலி : ''தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்,'' என, அக்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசினார்.

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி இடைத்தேர்தலில், காங்., வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து, கிருஷ்ணாபுரம், சிவந்திபட்டி பகுதிகளில், நேற்று, திண்ணை பிரசாரம் செய்து, ஸ்டாலின் பேசியதாவது:தமிழகத்தில், எட்டு ஆண்டுகளாக நடக்கும், அ.தி.மு.க., ஆட்சியில், விவசாயிகள், மகளிர் சுயஉதவிக் குழுவில் உள்ள பிரச்னைகள் உட்பட, எந்தவித அடிப்படை பிரச்னைகளும் தீர்க்கப்படவில்லை.உள்ளாட்சிகளில், மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால், கிராமப்புற பிரச்னை கள் தீர்ந்தபாடில்லை. தி.மு.க., விரைவில் ஆட்சி அமைக்கும். அதற்கு, நாங்குநேரி இடைத்தேர்தலை பயன்படுத்திக் கொள்ளுங்கள். தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.

அமைச்சர் மயக்கம்நாங்குநேரியில், அ.தி.மு.க., வேட்பாளர் நாராயணனுக்கு, தமிழக அமைச்சர்கள், 10க்கும் மேற்பட்டவர்கள் முகாமிட்டு, ஆதரவு திரட்டி வருகின்றனர்.நேற்று பகலில், களக்காடு யூனியன் பகுதிகளில், செய்தி துறை அமைச்சர் ராஜு, பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர், பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து, ஒரு வாரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வந்ததால், சோர்வு ஏற்பட்டு மயக்கம் அடைந்ததாக, டாக்டர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilselvan - Chennai,இந்தியா
11-அக்-201902:01:29 IST Report Abuse
Tamilselvan அத்தைக்கு மீசை முளைக்கட்டும் பார்க்கலாம். குடும்ப கொள்ளையர்களிடம் இருந்து, ஊழல் கும்பல் களிடம் இருந்து இருந்து,சுயநல கும்பல் களிடம் இருந்து உண்மையான தொண்டர்களிடம் வரும் வரை சுடலையின் பகல் கனவு நடக்காது.
Rate this:
Share this comment
Cancel
Girija - Chennai,இந்தியா
11-அக்-201900:49:46 IST Report Abuse
Girija கடா எப்போ வெட்றது, காது எப்போ குத்தறது ? கவுண்டமணி செந்தில் காமெடி போல் இல்லை ?
Rate this:
Share this comment
Cancel
TAMILAN - new jerssy,யூ.எஸ்.ஏ
10-அக்-201920:28:52 IST Report Abuse
TAMILAN ஆட்சிக்கு வந்ததும் உள்ளாட்சி தேத்தலில் அறுபது சதவீதம் தமிழ் பேசும் தெலுங்கர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் . தமிழர்களுக்கு மீதமுள்ள இடங்களில் கொஞ்சம் வாய்ப்பு கொடுக்கப்படும். என்ன நியாயமோ தெரியவில்லை.
Rate this:
Share this comment
Rajesh - Chennai,இந்தியா
11-அக்-201901:45:09 IST Report Abuse
Rajeshஎன்ன செய்யுறது டாஸ்மாக் தமிழனுக்கு சூடு சொரனையே இல்லையே..........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X