தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் உள்ளாட்சி தேர்தல் நடக்கும்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் உள்ளாட்சி தேர்தல் நடக்கும்'

Added : அக் 10, 2019 | கருத்துகள் (33)
Share
 'தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் உள்ளாட்சி தேர்தல் நடக்கும்'

திருநெல்வேலி : ''தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்,'' என, அக்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசினார்.

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி இடைத்தேர்தலில், காங்., வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து, கிருஷ்ணாபுரம், சிவந்திபட்டி பகுதிகளில், நேற்று, திண்ணை பிரசாரம் செய்து, ஸ்டாலின் பேசியதாவது:தமிழகத்தில், எட்டு ஆண்டுகளாக நடக்கும், அ.தி.மு.க., ஆட்சியில், விவசாயிகள், மகளிர் சுயஉதவிக் குழுவில் உள்ள பிரச்னைகள் உட்பட, எந்தவித அடிப்படை பிரச்னைகளும் தீர்க்கப்படவில்லை.உள்ளாட்சிகளில், மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால், கிராமப்புற பிரச்னை கள் தீர்ந்தபாடில்லை. தி.மு.க., விரைவில் ஆட்சி அமைக்கும். அதற்கு, நாங்குநேரி இடைத்தேர்தலை பயன்படுத்திக் கொள்ளுங்கள். தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.

அமைச்சர் மயக்கம்நாங்குநேரியில், அ.தி.மு.க., வேட்பாளர் நாராயணனுக்கு, தமிழக அமைச்சர்கள், 10க்கும் மேற்பட்டவர்கள் முகாமிட்டு, ஆதரவு திரட்டி வருகின்றனர்.நேற்று பகலில், களக்காடு யூனியன் பகுதிகளில், செய்தி துறை அமைச்சர் ராஜு, பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர், பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து, ஒரு வாரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வந்ததால், சோர்வு ஏற்பட்டு மயக்கம் அடைந்ததாக, டாக்டர்கள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X