பொது செய்தி

இந்தியா

எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்...

Added : அக் 10, 2019
Advertisement
எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்...

மனது என்ன நினைக்கிறதோ அதுதான் செயலாக மாறுகிறது. எண்ணங்களை பொறுத்து தான் வாழ்க்கை அமைகிறது. ஆரோக்கியமான வாழ்வுக்கு உடல்நலம் போல மனநலமும் மிக முக்கியம். மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்க வலியுறுத்தி உலக சுகாதார நிறுவனம் சார்பில் அக்., 10ம்தேதி உலக மனநிலை தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'தற்கொலை தடுப்பில் கவனம் செலுத்துங்கள்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

அனைத்து வயதினரையும் மனநலம் பாதிக்கிறது. கவலை, சோகம், வேலையின்மை, ஏமாற்றம், ஏக்கம், தொடர் தோல்வி, அதிக மது பழக்கம், போர், இயற்கை சீற்றங்கள் ஆகியவை மன அழுத்தம் உருவாக காரணங்கள். மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பது பெரிய சவால். நீண்டகால சிகிச்சைகளின் மூலம் ஓரளவுக்குத் தான் இதை தீர்க்க முடியும். இந்தியாவில் மக்கள் தொகைக்கு ஏற்ப, மனநல மருத்துவர்களின் எண்ணிக்கை இல்லை.

வேண்டாம் தனிமை:
மனநலம் பாதித்தவர்களை தீண்டத்தகாதவரைப் போல பார்ப்பது, பிரச்னையை அதிகரிக்கிறது. நகர்ப்புறங்களில் வாழ்வோர், அதிகம் படித்தவர்களிடம் இந்த தீண்டாமை அதிகம் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. இவர்களை மதிப்பாக நடத்துவது, சிகிச்சை அளிப்பது, அவர்களுக்கு நியாயமான உரிமைகளை வழங்குவது போன்றவை கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாததாக உள்ளது.

மனநோயை பேய் பிடித்திருப்பதாக புரிந்து கொள்கின்றனர். இதனால் மை வைத்தல், மருந்து வைத்தல், பேய் விரட்டுதல் போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இவை தேவையற்றவை. மனநலம் பாதிக்காமல் இருக்க எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள். உடற்பயிற்சி, யோகா, தியானம் செய்வது நல்லது. மக்களுடன் பழக முன் வாருங்கள். தனிமையாக இருப்பதை தவிர்க்க வேண்டும்.

40:
மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், தற்கொலைக்கும் முயற்சி செய்கின்றனர். உலகில் 40 வினாடிக்கு ஒருவர் தற்கொலை செய்கிறார்.

20:

உலகில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 20 சதவீதம் பேர், மனநிலை பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X