சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமியை கொன்ற, 'பாசக்கார' சித்தி கைது

Added : அக் 10, 2019 | கருத்துகள் (20)
Advertisement
 சிறுமியை கொன்ற, 'பாசக்கார' சித்தி கைது

சேலையூர் : கணவரின் முதல் மனைவியின் மகளை, மாடியில் இருந்து தள்ளி கொலை செய்த சித்தியை, சேலையூர் போலீசார், நேற்று கைது செய்தனர்.

சென்னை, குரோம்பேட்டை அடுத்த அஸ்தினாபுரம், சக்கரபாணி தெரு விரிவில் உள்ள, அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர், பார்த்திபன், 36; மென்பொருள் நிறுவன ஊழியர். இவரது மகள் ராகவி, 6; தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார்.பார்த்திபனின் முதல் மனைவி சரண்யா, 2014ல் உடல்நலக்குறைவால் இறந்தார். இதையடுத்து, 2016ல், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்துக்கோட்டையைச் சேர்ந்த சூர்யகலா, 33, என்பவரை, அவர் இரண்டாவதாக திருமணம் செய்தார்.

திருமணமானது முதல், சிறுமி ராகவியை, சூர்யகலா ஒதுக்கி வந்தார். இதனால், கணவன்- - மனைவி இடையே, அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது.ஒரு கட்டத்தில், ராகவியை வளர்க்க, சூர்யகலா மறுத்ததால், பார்த்திபன் விவாகரத்து வழங்க முடிவு செய்தார். பின், இரு வீட்டாரும் பேசி, சமாதானம் செய்தனர்.அப்போது, ராகவியை, தன் மகள் போல் பார்த்துக் கொள்வதாக கூறி, சூர்யகலா தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.இதற்கிடையே, ஓராண்டிற்கு முன், சூர்யகலாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது.

அப்போது முதல், சூர்யகலா, மீண்டும் ராகவியை ஒதுக்கி உள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம், 2:00 மணிக்கு, பார்த்திபனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட சூர்யகலா, 'நீண்ட நேரமாக ராகவியை காணவில்லை' எனக் கூறினார்.வீட்டிற்கு வந்த பார்த்திபன், வீட்டிலும், அருகில் உள்ள பூங்கா மற்றும் மாடியிலும் தேடினார். அப்போது, வீட்டின் பின்புறம் உள்ள, மைதானத்தின் புதர் மண்டிய பகுதியில், ராகவி விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

அவரை மீட்ட பார்த்திபன், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு, ராகவியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக கூறினர்.சேலையூர் போலீசார், சந்தேக மரணம் என, வழக்குப் பதிந்து -விசாரித்தனர். சூர்யகலா மீது சந்தேகம் இருப்பதாக, பார்த்திபனின் முதல் மனைவி சரண்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூறினர். போலீசார், அவரை காவல் நிலையம் அழைத்து சென்று, விசாரணை நடத்தினர்.

இதில், அவர் சிறுமியை மாடிக்கு விளையாட அழைத்துச் சென்று, அங்கிருந்து தள்ளிவிட்டு கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்இதையடுத்து, சூர்யகலாவை போலீசார் கைது செய்தனர்.இரண்டு ஆண்டுகளுக்கு முன், பார்த்திபன் - சூர்யகலா இருவரும் விவாகரத்து பெற, முடிவு செய்தபோது, பார்த்திபனுக்கு தெரியாமல், எங்கள் வீட்டிற்கு, சூர்யகலா, அவரது பெற்றோர் வந்தனர். 'சரண்யா உடல்நலமின்றி இறந்தாரா; பார்த்திபனும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்து, கொலை செய்தனரா?' எனக் கேட்டனர்.

நாங்கள், 'உடல்நலமின்றி தான் இறந்தார்' எனக் கூறினோம். அப்போதே, ராகவியை வளர்க்க விருப்பமில்லை எனக் கூறியிருந்தால், நாங்களே வளர்த்திருப்போம். இப்படி அநியாயமாக கொன்றுவிட்டார்.சந்துரு, சிறுமியின் உறவினர்

Advertisement


வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundar - singapore,சிங்கப்பூர்
15-அக்-201914:02:50 IST Report Abuse
sundar இவளெல்லாம் பிணத்துக்கு சமம்,ஒன்பது வயது குழந்தை கிட்டத்தட்ட இன்னும் 10 ஆண்டில் ஒரு பெண்,இறந்த அவள் அம்மாவின் பிறவி. அம்மா & இறந்த குழந்தையின் ஆன்மா சாந்தி அடைய ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை 3 வருடம் கழித்து கொடுங்கள் பிறந்த குழந்தையாவுது இவள் கெட்ட எண்ணம் இல்லாமல் வளரட்டும்.
Rate this:
Share this comment
Cancel
karutthu - nainital,இந்தியா
13-அக்-201912:31:40 IST Report Abuse
karutthu இந்த மாதிரி பெண்களுக்கு சாகும் வரை ஜாமீனில் வரமுடியாதவகையில் கடுங்காவல் தண்டனையை கொடுக்கணும் ஆனால் அந்த ஆண் குழந்தையை யார் வளர்க்க வேண்டும் வேண்டும் என்பதை நீதி மன்றம் தான் முடிவு செய்யவேண்டும் .
Rate this:
Share this comment
Balaji - Chennai,இந்தியா
14-அக்-201912:26:57 IST Report Abuse
Balajiசூர்யா கலா செய்த பாவம், அவள் குழந்தை இன்னொரு சித்தியிடம் வளர போகிறது..விதைப்பது எதுவோ, அறுப்பதும் அதுவே.....
Rate this:
Share this comment
Cancel
Manivannan.J - Chennai,இந்தியா
11-அக்-201921:26:51 IST Report Abuse
Manivannan.J தயவு செய்து இந்த பொம்பளைக்கு மரண தண்டனை கொடுங்க அப்போதுதான் எங்க மனசில இருக்கிற கவலை போகும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X