எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பிரதமர், சீன அதிபர் வருகை; மின் வினியோகம், 'அலர்ட்'

Added : அக் 10, 2019
Advertisement
 பிரதமர், சீன அதிபர் வருகை; மின் வினியோகம், 'அலர்ட்'

பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் வருகையை முன்னிட்டு, சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில், மின் வினியோக பணியை, மின் வாரியம், 'அலர்ட்' செய்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டில், மின் வாரியத்திற்கு, வட சென்னை என்ற பெயரில், 1,830 மெகா வாட் திறனில், அனல் மின் நிலையம் உள்ளது. அதே மாவட்டத்தில் உள்ள, வல்லுாரில், தேசிய அனல் மின் கழகம் மற்றும் மின் வாரியத்திற்கு சொந்தமாக, தலா, 500 மெகா வாட் திறனில், மூன்று அலகுகள் உடைய, அனல் மின் நிலையம் உள்ளது.

இவற்றில் உற்பத்தியாகும் மின்சாரம் தான், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின், மின் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர், வரும், 11, 12ம் தேதி, மாமல்புரம் வருகின்றனர். சீன அதிபர், சென்னை, கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார்.

இதனால், காஞ்சிபுரம், சென்னையில், மின் வினியோக பணியை, வாரியம் அலர்ட் செய்துள்ளது. இதற்காக, வரும், 10ம் தேதி இரவு முதல், 12ம் தேதி வரை, துணைமின் நிலையங்கள் மற்றும் பிரிவு அலுவலகங்களில், 24 மணி நேரமும் இருக்குமாறு, பொறியாளர்களிடம், வாரியம் தெரிவித்துள்ளது.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X