பொது செய்தி

தமிழ்நாடு

சீன அதிபரை கவர சிறப்பு கலை நிகழ்ச்சிகள்

Updated : அக் 10, 2019 | Added : அக் 10, 2019 | கருத்துகள் (11)
Share
Advertisement
 சீன அதிபர்  சிறப்பு கலை நிகழ்ச்சிகள்: 34 இடங்களில் மேடை ப்பு

சீன அதிபரை கவரும் வகையில், கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக, 34 இடங்களில் மேடை அமைக்கும் பணி, வேகமாக நடக்கிறது.இரு நாடுகளுக்கு இடையே, நல்லறவு பேச்சு நடத்த, பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் சந்திக்கின்றனர். இதற்காக, சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில், சீன அதிபர் வரும், 11, 12 இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். அவரை கவரும் வகையில் தமிழகத்தின் பாரம்பரியத்தை பறைசாற்றும் கலைநிகழ்ச்சிகள், தமிழக அரசின் ஏற்பாட்டில் நடத்தப்பட உள்ளன.


latest tamil news



இதுமட்டுமின்றி, பள்ளி, கல்லுாரி மாணவர்களும், சீன அதிபரை வரவேற்கவுள்ளனர். இதற்காக, சென்னை விமான நிலையத்தில் துவங்கி, மாமல்லபுரம் வரை, 34 இடங்களில் மேடை அமைக்கும் பணிகளை, தமிழக பொதுப்பணித் துறையினர் துவங்கியுள்ளனர்.பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக, விமான நிலையத்தில் துவங்கி, மாமல்லபுரம் வரை, 54 கி.மீ.,க்கு சாலையோரங்களில் தடுப்புகள் அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.
சீன அதிபர் மற்றும் அந்நாட்டு அதிகாரிகள் குழுவினர், மாமல்லபுரத்தின் அழகை ரசிப்பதற்காக, தற்காலிக மின்விளக்கு வசதிகளையும், பொதுப்பணித் துறையினர் செய்து வருகின்றனர்.முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவின்படி, இப்பணிகளை ஒருங்கிணைப்பதற்கு, பொதுப்பணித் துறை கட்டடங்கள் பிரிவின், முதன்மை தலைமை பொறியாளர் ராஜாமோகன், கண்காணிப்பு பொறியாளர் ஆயத்தரசு ராஜசேகர் மற்றும், 50 பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.***
- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரத்தினம் - Muscat,ஓமன்
11-அக்-201909:46:49 IST Report Abuse
ரத்தினம் இந்த சந்திப்பு, வரவேற்ப்பால், மாமல்லபுரம் மற்றும் தமிழகம் உலக மக்களின் ஈர்ப்பை கவரும். மாமல்லபுரம் இன்னும் சுத்தமாக மிளிரும். அது நல்லது தானே. இரு நாடுகளுக்கு உள்ளே உள்ள பகைமை குறையும். இந்திய பொருளாதாரத்தில் ஒரு சிறிய மாற்றமெனும் நிகழ வாய்ப்புண்டு.
Rate this:
Cancel
s.rajagopalan - chennai ,இந்தியா
10-அக்-201913:25:44 IST Report Abuse
s.rajagopalan எல்லாம் 'செட் அப் புதேன் ஆனால் யெச்சூரி, முத்தரசன், இந்து பத்திரிகை ராம் ...போன்றோர் இது பற்றி மூச்சு விட மாட்டார்கள்...முடியாது மோடி நல்லாவே பீதி கிளப்பறாரு
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
10-அக்-201913:10:18 IST Report Abuse
Sridhar இந்த வரவேற்பை பற்றி D ராஜாவும் பாண்டியனும் என்ன சொல்கிறார்கள் என்பதுதான் முக்கியம். மேலும் பினராய் விஜயன் மற்றும் யெச்சூரி போன்றவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா என்பதும் முக்கியம். அவர்கள் தலைவன் வரும்போது அவர்கள் இல்லாமல் விழா நடத்தினால் சிறப்பாக இருக்காது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X