அவதூறு வழக்கு :சூரத் கோர்ட்டில் ராகுல் ஆஜர்

Updated : அக் 10, 2019 | Added : அக் 10, 2019 | கருத்துகள் (11)
Advertisement
அவதூறு வழக்கு : சூரத் கோர்ட், இன்று ராகுல் ஆஜர்

சூரத் : பிரதமர் மோடி குறித்து பேசியதாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் இன்று (அக்.10) சூரத் கோர்ட்டில் ஆஜரானார், ராகுல்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது, காங்., முன்னாள் தலைவர், ராகுல் பேசியதாவது: நாட்டின் காவலாளி என தன்னை கூறி வருகிறார் மோடி. ஆனால் 'அனைத்து திருடர்களின் பெயர்களும் மோடி என்று எப்படி உள்ளது' என்றார். ராகுல் பேச்சு குறித்து குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டிருந்தது.




இந்த வழக்கில் நேரில் ஆஜராக கோரி சம்மன் அனுப்பிவைக்கப்பட்டது. இருந்தும் ராகுல் ஆஜராகவில்லை. இந்நிலையில் இன்று (அக்.10) நேரில் ஆஜராக ராகுலுக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து ராகுல் இன்று சூரத் கோர்ட்டில் நேரில் ஆஜரானார். அப்போது, தான் நேரில் ஆஜராவதில் இருந்து நிரந்தரமாக விலக்கு அளிக்க வேண்டும் என ராகுல் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ராகுலின் மனு மீது பதிலளிக்க மனுதாரருக்கு அவகாசம் அளித்து, இவ்வழக்கு விசாரணையை டிசம்பர் 10 ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
10-அக்-201916:25:50 IST Report Abuse
Endrum Indian பட்டாயா போயிட்டு நல்ல ரிலாக்ஸ் பண்ணி விட்டு வந்தால் பின்னேயும் டென்சன் படுத்தி பின்னேயும் பட்டாயா போக வைத்துவிடுவார்கள் போல இருக்கின்றது. பாவம் பெட்டி வேணும் அவர்கள் என்ன பண்ணுவார்கள் 49 பேர் தேச துரோக வழக்கு கான்செல் ஆயிருச்சு இல்லே இப்போ இந்த பக்கமாக முயற்சிக்கின்றது இந்த அநீதிபதிகள்??? ஆமா இது நேற்று காலையில் நடந்ததா இல்லவே இல்லை??அப்போ இது வரைக்கும் என்னய்யா குறட்டை தூக்கம் அநீதிபதியவர்களே???
Rate this:
Share this comment
Cancel
10-அக்-201915:35:18 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இனி நிம்மதியாக பட்டயாவில் இருக்க முடியாது , எந்த உல்லாச சுற்றுலாவிலும் இருக்க முடியாது , வழக்கிற்காக இந்தியா வந்த உவந்து போகவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
konanki - Chennai,இந்தியா
10-அக்-201912:04:24 IST Report Abuse
konanki பச்ச பிள்ளையை பட்டயலேந்து பாதில வர சொன்னா எப்பிடி எஜமான்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X