சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

காட்டுத் தீயை தடுக்கும், 'ஜெல்'

Added : அக் 10, 2019
Advertisement
 காட்டுத் தீயை தடுக்கும், 'ஜெல்'

கோடைக் காலத்தில் காட்டுத்தீ, தாவரங்களையும் விலங்குகளையும் கபளீகரம் செய்வது உலகெங்கும் அதிகரித்துள்ளது. தீ பிடித்து பரவிய பிறகே, அதை அணைக்க வனத்துறை-தீயணைப்புத் துறை-பேரிடர் மேலாண்மைத் துறையினர் வருகின்றனர்.

இதற்கு மாற்றாக, அடர் கானகத்தில் தீப் பிடிக்காமல் முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பது நல்லது என வானவியல் ஆராய்ச்சி யாளர்கள் கருதுகின்றனர்.

அதன்படி, அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள், ஒரு புதிய தீயணைப்பு மருந்தினை, 'ஜெல்' வடிவில் உருவாக்கியுள்ளனர்.

இதை காட்டுத் தீ சீசன் துவங்குவதற்கு முன்பே வானுார்தி மூலம், 'ஸ்பிரே'செய்துவிட்டால், அந்த ஜெல், மரங்கள், செடி கொடிகள் மீது பட்டுப் படர்ந்து வெகு நாட்கள் வரை தீப் பிடிக்காமல் தடுக்கும் என்கின்றனர் கலிபோர்னிய ஆராய்ச்சியாளர்கள்.

தீ பரவாமல் இருக்க உதவும் அமோனியம் பாலிபாஸ்பேட் போன்ற வேதிப் பொருள்களை, ஜெல் போன்ற பொருளில் கலந்து வீசுவது நல்ல பலன் தரும் என்று ஆரம்ப கட்ட சோதனைகளில் தெரிய வந்துள்ளது.

ஜெல் காற்றில் ஆவியானாலும், இலை கிளைகளின் மேல் தீயணைக்கும் வேதிப் பொருட்கள் தங்கியிருக்கும் என்பதால், தீப் பிடிக்க வாய்ப்புள்ள கோடைக் காலம் முழுவதும் அவை காட்டுத் தீ உருவாகாமல் தடுக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X