காங்., பேரழிவை சந்திக்கும் : ஜோதியராதித்ய சிந்தியா

Updated : அக் 10, 2019 | Added : அக் 10, 2019 | கருத்துகள் (64)
Advertisement

புதுடில்லி : காங்., கட்சி மிக மோசமான நிலையில் உள்ளதாக கட்சியின் மூத்த தலைவரான சல்மான் குர்ஷித் சொன்ன 2 நாட்களில், ஜோதியராதித்ய சிந்தியாவும் அதே போன்ற கருத்தை வெளியிட்டுள்ளது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

கட்சி தலைவர் பதவியை ராகுல் ராஜினாமா செய்ததால் கட்சி நெருக்கடியில் உள்ளதாகவும், தள்ளாட்டமான சூழலை சந்தித்து வருவதாகவும் சல்மான் குர்ஷித் கூறி இருந்தார். கட்சியின் தலைமை பதவியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி இருந்தார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜோதியராதித்ய சிந்தியா, மற்றவர்களின் கருத்துக்கள் பற்றி நான் ஏதும் சொல்ல விரும்பவில்லை. கட்சியின் நிலைமையை ஆய்வு செய்து, மேம்படுத்த வேண்டும். அதற்க சில மணி நேரம் போதும். உடனடியாக கட்சியின் நிலைமை சரி செய்து காப்பாற்றாவிட்டால் கட்சி பேரழிவை சந்திக்கும் என்றார்.

ம.பி., மாநில காங்., பதவி தொடர்பாக கடந்த 2 மாதங்களாக கட்சி தலைமை மீது ஜோதியராதித்ய சிந்தியா அதிருப்தியில் உள்ளதாகவும், அவர் காங்.,ல் இருந்து விலகி பா.ஜ.,வில் இணை உள்ளதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில் கட்சியின் தற்போதைய நிலை குறித்து அவர் பேசி உள்ள கருத்து கட்சிக்குள் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. காஷ்மீரில் 370 சட்டப்பிரிவை மோடி அரசு நீக்கியதற்கும் ஆதரவாக ஜோதியராதித்ய சிந்தியா கருத்து கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
11-அக்-201908:33:45 IST Report Abuse
அம்பி ஐயர் “சுபஸ்ய சீக்கிரம்....” ததாஸ்து....
Rate this:
Share this comment
Cancel
tamizha tamizha - Bellevue,யூ.எஸ்.ஏ
11-அக்-201903:22:03 IST Report Abuse
tamizha tamizha காங்கிரஸ் அழிந்தால் இந்தியா அழிந்து போகும்.. அதைத்தான் பிஜேபி யம் RSS yum நீங்களும் செய்து கொண்டு இருக்கிறீர்கள்.. உங்களின் செயல்களால் விரையவில் இந்தியா பல துண்டுகளாக சிதற போகிறது....
Rate this:
Share this comment
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
11-அக்-201911:56:50 IST Report Abuse
Chowkidar NandaIndiaஇதுதான் இந்த வருடத்து ஸ்பெஷல் ஜோக்காம். எல்லோரும் வாய் விட்டு சிரியுங்கள். ஹா ஹா ஹா....
Rate this:
Share this comment
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
11-அக்-201921:19:29 IST Report Abuse
 nicolethomsontamizha tamizha - Bellevue,யூ.எஸ்.ஏ எப்படிடா இப்படி எல்லாம் யோசிக்க முடியுது...
Rate this:
Share this comment
Cancel
Gopal - Nalla Oor,யூ.எஸ்.ஏ
10-அக்-201921:02:17 IST Report Abuse
Gopal We need a strong opposition otherwise it won't prosper in a right direction but unfortunately none of them are clean other than A K Antony
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X