காங்., பேரழிவை சந்திக்கும் : ஜோதியராதித்ய சிந்தியா| Dinamalar

காங்., பேரழிவை சந்திக்கும் : ஜோதியராதித்ய சிந்தியா

Updated : அக் 10, 2019 | Added : அக் 10, 2019 | கருத்துகள் (64)
Share
புதுடில்லி : காங்., கட்சி மிக மோசமான நிலையில் உள்ளதாக கட்சியின் மூத்த தலைவரான சல்மான் குர்ஷித் சொன்ன 2 நாட்களில், ஜோதியராதித்ய சிந்தியாவும் அதே போன்ற கருத்தை வெளியிட்டுள்ளது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.கட்சி தலைவர் பதவியை ராகுல் ராஜினாமா செய்ததால் கட்சி நெருக்கடியில் உள்ளதாகவும், தள்ளாட்டமான சூழலை சந்தித்து வருவதாகவும் சல்மான் குர்ஷித் கூறி

புதுடில்லி : காங்., கட்சி மிக மோசமான நிலையில் உள்ளதாக கட்சியின் மூத்த தலைவரான சல்மான் குர்ஷித் சொன்ன 2 நாட்களில், ஜோதியராதித்ய சிந்தியாவும் அதே போன்ற கருத்தை வெளியிட்டுள்ளது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.



latest tamil news


கட்சி தலைவர் பதவியை ராகுல் ராஜினாமா செய்ததால் கட்சி நெருக்கடியில் உள்ளதாகவும், தள்ளாட்டமான சூழலை சந்தித்து வருவதாகவும் சல்மான் குர்ஷித் கூறி இருந்தார். கட்சியின் தலைமை பதவியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி இருந்தார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜோதியராதித்ய சிந்தியா, மற்றவர்களின் கருத்துக்கள் பற்றி நான் ஏதும் சொல்ல விரும்பவில்லை. கட்சியின் நிலைமையை ஆய்வு செய்து, மேம்படுத்த வேண்டும். அதற்க சில மணி நேரம் போதும். உடனடியாக கட்சியின் நிலைமை சரி செய்து காப்பாற்றாவிட்டால் கட்சி பேரழிவை சந்திக்கும் என்றார்.


latest tamil news



ம.பி., மாநில காங்., பதவி தொடர்பாக கடந்த 2 மாதங்களாக கட்சி தலைமை மீது ஜோதியராதித்ய சிந்தியா அதிருப்தியில் உள்ளதாகவும், அவர் காங்.,ல் இருந்து விலகி பா.ஜ.,வில் இணை உள்ளதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில் கட்சியின் தற்போதைய நிலை குறித்து அவர் பேசி உள்ள கருத்து கட்சிக்குள் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. காஷ்மீரில் 370 சட்டப்பிரிவை மோடி அரசு நீக்கியதற்கும் ஆதரவாக ஜோதியராதித்ய சிந்தியா கருத்து கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X