பொது செய்தி

தமிழ்நாடு

மோடி - ஜின்பிங் சந்திப்பு: நிகழ்ச்சிநிரல் என்ன

Updated : அக் 10, 2019 | Added : அக் 10, 2019
Share
Advertisement
சென்னை : மாமல்லபுரத்தில் அக், 11, 12-ம் தேதிகளில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்தித்து பேசுகிறார்கள். இரு தலைவர்களும் மாமல்லபுரத்தில் சுற்றுலா இடங்களைப் பார்வையிட்டு, கலை நிகழ்ச்சிகளையும் கண்டு களிக்கிறார்கள்.சென்னை மாமல்லபுரம் வரும் ஜின்பிங், மோடி இடையே அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பு நடைபெறுகிறது. இந்தச் சந்திப்பில் உடன்பாடுகளும், புரிந்துணர்வு

சென்னை : மாமல்லபுரத்தில் அக், 11, 12-ம் தேதிகளில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்தித்து பேசுகிறார்கள். இரு தலைவர்களும் மாமல்லபுரத்தில் சுற்றுலா இடங்களைப் பார்வையிட்டு, கலை நிகழ்ச்சிகளையும் கண்டு களிக்கிறார்கள்.



latest tamil news


சென்னை மாமல்லபுரம் வரும் ஜின்பிங், மோடி இடையே அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பு நடைபெறுகிறது. இந்தச் சந்திப்பில் உடன்பாடுகளும், புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையொப்பமாகாது. நட்பை வலுப்படுத்திக்கொள்ள மட்டுமே சந்திப்பு நடத்தப்படுகிறது.


பயண விபரம் :



அக்.,11 :பகல் 1.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங், 2.05 மணிக்கு கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர விடுதிக்கு தனது பிரத்யேக குண்டு துளைக்காத காரில் செல்கிறார். ஓட்டலில் பகல் உணவை முடித்துக்கொண்டு, அங்கிருந்து மாலை 4 மணி அளவில் மாமல்லபுரத்திற்கு புறப்படுகிறார். பிரதமர் மோடியை மாமல்லபுரத்தில் மாலையில் சந்திக்கிறார்.


latest tamil news



மோடியும், ஜின்பிங்கும் மாலையில் சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேச உள்ளனர். மாமல்லபுரத்தில் இருக்கும் பல்லவர்கள் கால சிற்பங்கள், குகைக் கோயில்கள், வரலாற்று சின்னங்களை பார்வையிடுகின்றனர். இரவு ஜின்பிங்கிற்கு மோடி இரவு விருந்து அளிக்கிறார். அதன்பின் கலாஷேத்ரா சார்பில் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரு தலைவர்களும் பாரம்பரிய நடனம், கலை நிகழ்ச்சிகளைப் பார்வையிடுகின்றனர்.

அக்.,12 :
காலை மோடியும், ஜின்பிங்கும் 2-ம் கட்டப் பேச்சில் ஈடுபடுகிறார்கள். இந்தப் பேச்சு தாஜ் பிஷ்ஷர்மென்ஸ் கோவ் ஓட்டலில் நடக்கிறது. அங்கு மதிய உணவை முடித்துக்கொண்டு 2 மணிக்கு ஜின்பிங் நேபாளம் புறப்படுகிறார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X