கோர்ட் செய்தி

தமிழ்நாடு

திருச்சி கொள்ளை: தேடப்பட்டவர் சரண்

Added : அக் 10, 2019 | கருத்துகள் (4)
Advertisement
THIRUCHIRAPALLI, LALITHAA, JEWELLERY, ROBBERY, திருச்சி, லலிதா, ஜூவல்லரி, கொள்ளை

திருச்சி: லலிதா ஜுவல்லரி நகைக் கடையின் திருச்சி கிளையில், கடந்த அக்., 02ல் மர்ம நபர்கள், 13 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், அதில் முகமூடி அணிந்த இரு நபர்கள் கொள்ளையடித்தது தெரிந்தது. இதன் அடிப்படையில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். வாகன சோதனையின் போது, இரு நபர்கள் எடுத்து வந்த அட்டை பெட்டியில் லலிதா நகைக்கடையின் சில நகைகள் இருந்ததை கண்டறிந்தனர்.
அதில் ஒருவர், போலீசுக்கு பயந்து தப்பி ஓடினார். பிடிபட்டவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர், திருவாரூர் மடப்புரத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பதும், தப்பி ஓடியவர் சீராத்தோப்பை சேர்ந்த சுரேஷ் என தெரிந்தது. இதனையடுத்து மணிகண்டனை கைது செய்த போலீசார், தப்பியோடிய சுரேஷை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் இன்று (அக்., 10) திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் கோர்ட்டில் சுரேஷ் சரணடைந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vasanthan - Moscow,ரஷ்யா
10-அக்-201917:56:35 IST Report Abuse
vasanthan திருவாரூர் காரன் சரண் அடைவதா? சரித்திரத்திலேயே அப்படி நடக்காது. தான் திருட்டு தனமாக ரயிலில் ஏறி வந்தாலும் அந்த ரயிலுக்குத்தான் திருட்டு ரயில் என்று பெயர் சூட்டுவதில் கில்லாடி பிறந்த ஊர்.. இவன் சொந்தங்களை பார்க்க கோபாலபுரம் போயிருப்பான் வழியில் போலீஸ் செங்கத்தில் மடக்கி இருக்கும் ...
Rate this:
Share this comment
Cancel
L.N.Ramesh - madurai,இந்தியா
10-அக்-201914:08:36 IST Report Abuse
L.N.Ramesh படித்தவர்கள் அதிகாரத்தில் உள்ளவர்கள் போல் வங்கியில் கடன் என்ற பேரில் வாங்கமுடியாது. பின் வாராக்கடன் என்று கோடியில் தள்ளுபடி பெறமுடியாது. வராக்கடன் பெற்றவர்கள் மீது எந்த நடவடிக்கையும் பாயாது. ஆனால் இவர்களை போன்றவர்களுக்கும் வங்கி கடன் கொடுத்தால் இந்த மாதிரி நடக்காது.அரசாங்கம் இவர்களை போன்றவர்களை திருத்த வாராக்கடன் பெற்று வெளியில் சுதந்திரமாக திரியும் நபர்களிடம் பயிற்சி அளிக்கச்செய்தால் இவர்களும் அவர்களைப்போல் நன்றாய் வாழ்வார்கள்.இதற்குப்போய் ஏதோ படித்து பிழைக்கத்தெரியாமல் வாராக்கடன் வாங்கத்தெரியாமல் இவர்களுக்காக வாதாடும் பாவப்பட்ட வக்கீலை குறைசொல்லக்கூடாது.
Rate this:
Share this comment
Cancel
S.P. Barucha - Pune,இந்தியா
10-அக்-201912:37:51 IST Report Abuse
S.P. Barucha கொலையை தொழிலாக செய்பவர்களுக்கும், கொள்ளை அடிப்பதை , தொழிலாக செய்பவர்களுக்கும் ஆஜர் ஆகும் வழக்கறிஞரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X