பொது செய்தி

இந்தியா

கொஞ்சும் தமிழ் பேசும் சீன பெண்கள்

Updated : அக் 10, 2019 | Added : அக் 10, 2019 | கருத்துகள் (27)
Advertisement

புதுடில்லி : சீன செய்தி நிறுவனத்தில் 3 பெண்கள், தமிழ் மீதான தங்களின் ஆர்வத்தையும், ஈடுபாட்டையும் விவரித்துள்ளனர். பீஜிங்கில் ஆர்வத்துடன் தமிழ் கற்றுக் கொண்ட இந்த 3 பெண்களும் தமிழக கலாச்சார மற்றும் பாரம்பரியம் மீது தீராத காதல் வயப்பட்டனர்.






தமிழ் மீது கொண்ட காதலால் தங்களில் பெயர்களை கலைமகள், பூங்கோதை, நிலானி என மாற்றி அமைத்துக் கொண்டுள்ளனர். தமிழ் மீதான ஆர்வம் குறித்து கூறிய நிலானி, மற்ற எந்த மொழியும் இத்தகைய நீண்ட வரலாற்றை பெற்றிருக்கவில்லை. தமிழ் மொழி, சீன மொழியைப் போல பழமையானது என்றார். பூங்கோதை கூறுகையில், தமிழ் கற்றுக் கொண்ட பிறகு, இந்த மொழியுடன் பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டோம்.

2003 ம் ஆண்டு முதல் முறையாக தமிழகம் வந்த ஜாவோ ஜியாங், தனது பெயரை கலைமகள் என மாற்றிக் கொண்டார். அதன் பிறகு 6 முறை தமிழகம் வந்துள்ளார். தமிழகம் தவிர இந்தியாவில் அவர் சென்ற ஒரே நகரம் டில்லி மட்டுமே. இது பற்றி அவர் கூறுகையில், சீனா செல்வதற்கு டில்லியில் இருந்து தான் மாறி போக வேண்டி உள்ளது. ஒருவேளை இங்கிருந்து நேரடியாக விமானம் இருந்தால், நான் நேரடியாகவே இங்கு வந்து விடுவேன் என்றார்.
இவர் தற்போது, சீன ஊடக குழுவின் தமிழ் பிரிவு தலைவராக இருந்து வருகிறார். இது முன்னர் சீன சர்வதேச வானொலி என அழைக்கப்பட்டு வந்தது. எழுத்தாளர் அகிலனின் நாவல்களில் விவரிக்கப்பட்டுள்ள தமிழர் சமூக வாழ்வு மற்றும் அவற்றின் காலம் குறித்த எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு, தமிழ் மீது ஈடுபாடு கொண்டார்.




இவருடன் பணிபுரியும் லியாவ் லியாங்,தனது பெயரை பூங்கோதை எனவும், ஹெ லியான் தனது பெயரை நிலானி எனவும் மாற்றிக் கொண்டனர். பூங்கோதைக்கு யோகா புத்தகங்களால் தமிழ் மொழி மீது ஈடுபாடு ஏற்பட்டு, யோகா கற்க துவங்கினார். நிலானி, கோவை பாரதிதாசன் பல்கலை.,யில் 6 மாதங்கள் தங்கி இருந்து தமிழ் மற்றும் திருக்குறளை கற்றுக் கொண்டார். அவர் கூறுகையில், சீன அரசு கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இதனால் தான் சீனா கல்வி அறிவில் சிறந்ததாக உள்ளது என்றார்.

இவர்களின் விருப்பமான தமிழ் உணவு மசாலா தோசை, இட்லி, தோசை ஆகியன தான். சீன அதிபரின் தமிழக வருகையை தமிழில் தொகுத்து வழங்குவதற்காக தெற்காசிய ஊடக பிரிவு பிரதிநிதிகளாக இவர்கள் தமிழகம் வந்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரத்தினம் - Muscat,ஓமன்
11-அக்-201909:37:41 IST Report Abuse
ரத்தினம் வாழ்த்துக்கள் வனிதாமணிகளே
Rate this:
Share this comment
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
11-அக்-201908:32:44 IST Report Abuse
அம்பி ஐயர் “சீன அரசு கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இதனால் தான் சீனா கல்வி அறிவில் சிறந்ததாக உள்ளது என்றார்...” இங்குள்ள அரசுகளும் எதிர்க்கட்சிகளும் கல்வியை ஒழிப்பதில்.... தரமான கல்வி பாமரனுக்குக் கிடைக்காமல் தடுப்பதில் கல்வியை வியாபாரம் செய்வதில் அக்கறையாக உள்ளனர்.... அதிலும் எதிரிக் கட்சியோ..... கலவியில் தான் அதிக அக்கறை கொண்டுள்ளது....
Rate this:
Share this comment
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
10-அக்-201922:23:58 IST Report Abuse
Rajagopal போக சித்தர் சீனாவில் போயாங் என்று அழைக்கப் பட்டார். தமிழ் சித்தர்கள் சீனர்களோடு தொடர்பு வைத்திருந்தார்கள். போதி தருமர் சீனாவில் ஷாஓலின் முறையில் சண்டைப் பயிற்சியையும், தியானத்தையும் துவங்கி வைத்தார். தமிழர்கள் பல நூற்றாண்டுகளுக்கு தென் சீனாவோடு கடல் வழியில் வியாபாரத் தொடர்பு வைத்திருந்தார்கள். இவர்கள் இப்போது தமிழில் ஆர்வம் காட்டுவதை சந்தேகத்தோடுப் பார்க்கிறேன். இலங்கையில் சீனா மூக்கை நுழைத்திருக்கிறது. தமிழகத்தில் வளரும் பிரிவினை சக்திகளை அவர்கள் நிச்சயம் கவனித்துக் கொண்டிருப்பார்கள். அதை ஊக்குவிக்க வேண்டுமானால், தமிழ் தெரிந்தவர்கள் தேவை. காலம் இப்போது வேறு. தமிழ் மற்றவர்கள் பேசுவதை நாம் வரவேற்றாலும், ஆதாரமில்லாமல் சீனன் ஆற்றோடு போவானா என்கிற சந்தேகம் எழுகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X