பொது செய்தி

தமிழ்நாடு

சீன அதிபரின் முகமூடியுடன் மாணவர்கள்

Updated : அக் 10, 2019 | Added : அக் 10, 2019 | கருத்துகள் (14)
Advertisement

சென்னை : தமிழகம் வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் சென்னையில் தீரவிமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி மற்றும் ஜின்பிங் சந்திப்பை முன்னிட்டு சென்னை முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.






அக்.,11 மற்றும் 12 ஆகிய 2 நாட்கள் மாமல்லபுரத்தில் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேச உள்ளனர். சென்னை விமான நிலையம் துவங்கி, மாமல்லபுரம் வரை வரவேற்பு ஏற்பாடுகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்தியா மற்றும் சீன பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று மாமல்லபுரத்தில் ஆய்வு நடத்திச் சென்ற நிலையில், இன்று பிரதமர் அலுவலக அதிகாரிகள் ஆய்வு நடத்தி உள்ளனர். சென்னையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.





தமிழக பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிப்பதற்காக வாழை மர தோரணங்கள், கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சீன அதிபரின் வருகையை முன்னிட்டு சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 2000 மாணவர்கள் ஒன்று கூடி, ஜிங்பிங்கின் முகமூடி அணிந்து, மனமார வரவேற்கிறோம் என ஆங்கிலம் மற்றும் சீன மொழியில் எழுதி வைத்துள்ளனர்.




Advertisement



தமிழகம் சுத்தமாகும் :


இதற்கிடையில் சட்ட விரோத பேனர் விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், சீன அதிபரின் வருகையால் சென்னை நகரமே சுத்தமாகி உள்ளது. இதே போன்று மற்ற உலக தலைவர்களும் வந்தால் தமிழகமே சுத்தமாகி விடும் என கருத்து தெரிவித்துள்ளது.










Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-அக்-201909:54:02 IST Report Abuse
ஆப்பு சீன அதிபருக்கே இது கொஞ்சம் ஓவரா இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
11-அக்-201906:54:05 IST Report Abuse
ஆப்பு கூத்தாடி தேசத்தில் இதெல்லாம் நடக்கலைன்னா தான் ஆச்சரியம். சரியாத்தான் தேர்வு செஞ்சிருக்காங்க.
Rate this:
Share this comment
Cancel
11-அக்-201906:52:47 IST Report Abuse
ஆப்பு இந்த முகமூடியெல்லாம் எங்கேருந்து வாங்குறாங்க? சீனாவில் ஜின் பிங்கு விழாவில் கொண்டாடியதில் மீந்ததா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X