பொது செய்தி

இந்தியா

அரையிறுதியில் மேரி கோம்: உலக குத்துச்சண்டையில் 8வது பதக்கம் உறுதி

Updated : அக் 10, 2019 | Added : அக் 10, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement

உலன்-உதே: பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் 8வது பதக்கத்தை உறுதி செய்து சாதித்தார் இந்தியாவின் மேரி கோம்.



latest tamil news


ரஷ்யாவில் பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. 51 கி.கி., எடைப்பிரிவில் இந்தியாவின் 'சீனியர்' மேரி கோம் களமிறங்கினார். காலிறுதியில் 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற கொலம்பியாவின் இன்கிரிட் வாலன்சியாவை சந்தித்தார். இதில் அனைத்து சுற்றிலும் சிறப்பாக செயல்பட்ட மேரி கோம், 5-0 என வெற்றி பெற்றதாக ஒருமனதாக அறிவிக்கப்பட, அரையிறுதிக்கு முன்னேறினார். உலக சாம்பியன்ஷிப்பில் 51 கி.கி., பிரிவில் முதல் பதக்கத்தை உறுதி செய்தார்.


latest tamil news



இனி 'எட்டு'

* உலக குத்துச்சண்டை அரங்கில் தனிப்பிறவியாக வலம் வருகிறார் மேரி கோம். முதன் முறையாக களமிறங்கிய தொடரில் (2001) வெள்ளி பதக்கம் கைப்பற்றினார். பின் களமிறங்கிய 2002, 2005, 2006, 2008, 2010, 2018 என ஆறு தொடர்களிலும் தங்கம் வென்றுள்ளார்.
* தற்போது அரையிறுதிக்கு முன்னேறிய இவர் குறைந்தபட்சம் வெண்கல பதக்கத்தை உறுதி செய்தார். இதனால் ஆண்கள், பெண்கள் என ஒட்டுமொத்த உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் அரங்கில் 6 தங்கம், 1 வெள்ளி உட்பட மொத்தம் 8 பதக்கங்கள் வெல்லும் முதல் நட்சத்திரம் என புதிய சாதனை படைத்துள்ளார்.
* இதற்கு முன் கியூபா வீரர் பெலிக்ஸ் சேவன், 6 தங்கம், 1 வெள்ளி என 7 பதக்கம் வென்றுள்ளார். அடுத்த இடத்தில் அயர்லாந்து வீராங்கனை கேட்யே டெய்லர் 6 பதக்கம் (5 தங்கம், 1 வெண்கலம்) வென்றுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
10-அக்-201920:39:52 IST Report Abuse
Sampath Kumar சூப்பர் சூப்பர் இது தான் உங்களிடம் எதிர் பார்த்தது கடவுள் அருள் உங்களுக்கு என்றும் உண்டு
Rate this:
Cancel
10-அக்-201917:00:37 IST Report Abuse
Indian Kumar ( Nallavarkal  Aatchikku VARAVENDUM ) எல்லாம் இறைவன் அருள் வாழ்க வளமுடன்
Rate this:
Cancel
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
10-அக்-201913:07:34 IST Report Abuse
Yaro Oruvan வாழ்த்துக்கள் சகோதரி.. உங்கள் தன்னம்பிக்கையும் உழைப்பும் அபாரமானது.. வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள் ..வாழ்த்துக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X