சீனாவின் கருத்து: காங்., கேள்வி

Updated : அக் 10, 2019 | Added : அக் 10, 2019 | கருத்துகள் (41)
Advertisement

புதுடில்லி: காஷ்மீர் விவகாரங்களை உற்றுக் கவனித்து வருவதாக கூறிய சீன அதிபரிடம், அவர்கள் நாட்டில் நடக்கும் அத்துமீறல்களை தடுக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தாதது ஏன் என காங்., கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.

சீனா சென்றுள்ள பாக்., பிரதமர் இம்ரான் கான், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை நேற்று சந்தித்து, காஷ்மீர் விவகாரம் குறித்து பேசி உள்ளார். அப்போது ஜின்பிங், காஷ்மீர் விவகாரத்தை சீனா உற்று கவனித்து வருகிறது. இது தொடர்பாக இந்தியாவும் பாக்.,ம் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என கூறி இருந்தார். சீன அதிபரின் இந்த கருத்தை குறிப்பிட்டு டுவீட் செய்துள்ள காங்., தலைவர் மணிஷ் திவாரி, மத்திய அரசிற்கு கேள்வி எழுப்பி உள்ளார்.

அதில், காஷ்மீர் விவகாரத்தை கவனிப்பதாக ஜி ஜின்பிங் கூறி உள்ளார். ஆனால் பிரதமர் அலுவலகமோ அல்லது வெளியுறவுத்துறை அமைச்சகமோ, ஹாங்காங்கில் நடக்கும் ஜனநாயகத்திற்காக நடக்கும் போராட்டம், ஷின்ஜியாங்கில் நடக்கும் மனிதஉரிமைகள் மீறல், திபெத்தில் அத்துமீறல், தென் சீன கடலில் நடக்கும் அத்துமீறல்களை நாங்கள் கவனித்து வருகிறோம் என கூறாதது ஏன்? சீனாவில் இஸ்லாமியர்கள் துன்புறுத்தப்படுவதை நிறுத்த வேண்டும் என சீன அதிபரிடம் கோரிக்கை விடுக்காதது ஏன்? என கேள்வி எழுப்பி உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
11-அக்-201908:29:20 IST Report Abuse
அம்பி ஐயர் ஏன்... காங்கிரஸ் கட்சியோ அதன் உதிரிக் கட்சிகளோ அறிக்கை விடலாமே.... சீனாவுக்குக் கடிதம் எழுதலாமே.... இப்போ வரும் அதிபரிடம் கூட நேரில் சொல்லலாமே.... அதை எல்லாம் விட்டுவிட்டு அடுத்தவர்களை மட்டுமே குற்றம் சொல்வது ஏன்....??? இவர்கள் ஆட்சியில் இருந்தபோது சீனாவில் அக்கிரமம் நடக்கவே இல்லையா....?? எல்லை தாண்டவில்லையா...??? அப்போதெல்லாம் மௌனம் காத்தது ஏன்...???
Rate this:
Share this comment
Cancel
Rajagopal Subramaniam - Chennai,இந்தியா
11-அக்-201905:51:58 IST Report Abuse
Rajagopal Subramaniam ஏன், நீங்களோ உங்கள் தோழமை கம்யூனிஸ்ட்களோ கூட அறிக்கை விடலாம். நீங்கள்தான் பாக்கிஸ்தான் ஆதரவு அறிக்கை விட்டு பழகியவர்கள் ஆயிற்றே.
Rate this:
Share this comment
Cancel
Mani -  ( Posted via: Dinamalar Android App )
11-அக்-201905:43:51 IST Report Abuse
Mani ungala norukki moolaila utkaara vechirukaanga.... kelvi dhaane kelu... yaar Kitts kakara? badhil Solla aalu? Scindhia innaiku sonnadhu correct.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X