சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சென்னையில் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல்

Added : அக் 10, 2019 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை: சீன அதிபர், தமிழகம் வரவுள்ள நிலையில் சென்னை அருகே ரவுடியின் மனைவி மீது நாட்டு வெடிகுண்டு வீசி சென்ற கும்பலால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை, ரிச்சி தெரு அருகே பெண் வழக்கறிஞர் ஒருவர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது 6 பேர் கொண்ட கும்பல், ஆட்டோவை வழிமறித்து, நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளனர். மேலும், அந்த பெண்ணை அரிவாளால் வெட்டிய கும்பல் அங்கிருந்து தப்பியோடினர். இச்சம்பவத்தால் ஆட்டோவில் சென்ற மற்றொரு பெண்ணும் காயமடைந்தார்.
இது குறித்து போலீசார் விசாரித்ததில், அந்த பெண் வழக்கறிஞர், ரவுடி தோட்டா சேகரின் 3வது மனைவி என தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. தப்பியோடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

நாளை (அக்., 11) சீன அதிபர் ஜின்பிங், இந்திய பிரதமர் மோடி ஆகியோரின் சந்திப்பு நிகழ்ச்சி, சென்னை மாமல்லபுரத்தில் நடப்பதையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்த நேரத்தில், பட்டபகலில் நாட்டு வெடிகுண்டு வீசி சென்ற நிகழ்வால் போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
11-அக்-201901:17:09 IST Report Abuse
கதிரழகன், SSLC ரவுடி க்கு மூணாவது பொண்டாட்டி வக்கீலு ... இன்னொரு ரவுடி அத்தி வரதர பாக்க ரெண்டு கிலோ நகை போட்டுக்கிட்டு வந்தான் ... இப்ப எல்லாம் எதுக்கு அரசியல் ல சேந்து கஷ்ட படணும். நேரடியா ரவுடியாவே இருக்கலாம். அரசியல் வியாதி போர்வை எல்லாம் தேவை இல்லை ன்னு ஆயிட்ட்டானுவ போல
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X