பொது செய்தி

இந்தியா

பூலோக சொர்க்கம்: மீண்டும் திறப்பு

Updated : அக் 10, 2019 | Added : அக் 10, 2019 | கருத்துகள் (17)
Share
Advertisement

ஸ்ரீநகர் : காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டதை அடுத்து கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை, இன்று முதல் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. முன்பு போலவே சுற்றுலாவாசிகள் பூலோக சொர்க்கம் என்று அழைக்கப்படும் காஷ்மீரின் அழகை ரசிக்கலாம்latest tamil newsகாஷ்மீரில் 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுவதற்கு முன், பாதுகாப்பு கருதி, காஷ்மீரில் இருந்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் புனித யாத்திரை மேற்கொள்வோர் வெளியேற்றப்பட்டனர். தற்போது காஷ்மீரில் நிலைமை சீராகி, அமைதி திரும்பியதை அடுத்து, கட்டுப்பாடுகள் தளர்த்திக் கொள்ளப்பட்டுள்ளன. அக்.,9 ம் தேதி காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக் வெளியிட்டுள்ள உத்தரவில், காஷ்மீருக்கு சுற்றுலா வருவோருக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும் என குறிப்பிட்டிருந்தார்.


latest tamil news


இந்நிலையில் காஷ்மீர் அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், காஷ்மீருக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என பாதுகாப்பு படையினர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தற்போது சுற்றுலா சீசன் என்பதால் 20,000 முதல் 25,000 சுற்றுலா பயணிகள் காஷ்மீருக்கு வந்துள்ளதாக சுற்றுலாத்துறை அளித்துள்ள புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு காஷ்மீர் வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டதை அடுத்து, சுற்றுலா பயணிகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என காஷ்மீர் போலீஸ் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sam - Dallas,யூ.எஸ்.ஏ
14-அக்-201909:25:12 IST Report Abuse
Sam அங்க காஷ்மீர் போலீஸ் ஆர்மிக்கே பாதுகாப்பு இல்லை இதுல மக்கள்வேறு ரெண்டு குண்டு போட்டணுக்க நாமபொலப்பு உaத்திக்கும் மக்கல்ல கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கவேணும்
Rate this:
Cancel
Raghunathan Nagarajan Ragu Naga - Atlanta,யூ.எஸ்.ஏ
11-அக்-201901:41:13 IST Report Abuse
Raghunathan Nagarajan Ragu Naga திரு.மதியழகன் அவர்களே, முஸ்லீம்களின் பாதுகாவலன் என்று கூறிக்கொள்ளும் பாகிஸ்தான் PM இம்ரான் கான் 2 நாட்களுக்கு முன்பு தான் சீன தேசம் சென்று வந்துள்ளார். எதெற்கெடுத்தாலும் பாகிஸ்தானுக்கு வக்காலத்து வாங்கி பேசும் காங்கிரஸ் இதைப்பற்றி நீங்களே பாகிஸ்தான் அதிபரிடம் கேட்கலாமே. ஏன் உலகில் எந்த பகுதியில் மனித உரிமை மீறல் நடந்தாலும் நம்நாட்டில் உள்ள சில தேசீயவாதிகள்? அவர்களுக்காக குரல் கொடுப்பார்களே. அவர்களும் எங்கேயோ பதுங்கி விட்டார்களே. தற்போது சீன அதிபர் இந்தியா வருகை தருகிறார். அவரிடம் நல்லுறவை மேம்படுத்துவது தான் தற்சமயம் முக்கியம். இதுதான் ராஜதந்திரம். ஹாங்காங் பற்றி எல்லாம் உலகம் பார்த்துக்கொள்ளும். காங்கிரஸ் அடிவருடிகள் கவலைப்பட தேவையில்லை.
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
10-அக்-201921:11:01 IST Report Abuse
Sampath Kumar பாத்து போங்க எவனாவது குண்டை போடா போறான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X