பிரம்மோற்சவம் சில நினைவுகள்.| chennai | Dinamalar

பிரம்மோற்சவம் சில நினைவுகள்.

Updated : அக் 10, 2019 | Added : அக் 10, 2019 | கருத்துகள் (1)
Share




latest tamil news




வழக்கமான உற்சாகத்துடன் திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழா நடந்து முடிந்துள்ளது.




பெரிய சேஷ வாகனம்,சின்ன சேஷ வாகனம்,அனுமன் வாகனம்,யானை வாகனம்,குதிரை வாகனம் என ஒன்பது நாட்களும் 16 வகையான வாகனங்களில் உற்சவரான மலையப்ப சுவாமி அணிவகுத்து வந்தார்.





latest tamil news







மொத்த நாட்களிலும் 7 லட்சம் பக்தர்கள் வந்திருந்தனர்.ஐந்தாம் நாள் கருட சேவையன்று மட்டும் மூன்று லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வந்திருந்தனர்,அவர்களுக்காக இரண்டு லட்சம் புளியோதரை மற்றும் தக்காளி சாதம் பொட்டலமாக விநியோகம் செய்யப்பட்டது.இதற்காக 32 ஆயிரத்து 500 கிலோ அரிசியும்,20 ஆயிரம் கிலோ காய்கறியும் பயன்படுத்தப்பட்டது இது போக 20 ஆயிரம் லிட்டர் பால் காய்ச்சப்பட்டு பக்தர்களுக்கு பாலாகவும் மோராகவும் வழங்கப்பட்டது.





latest tamil news







இந்த ஒன்பது நாட்களிலும் பல்வேறு மாநிலத்தைச் சார்ந்த 677 கலைஞர்கள் பங்கேற்று பலவிதமான கலைநிகழ்ச்சிகள் வழங்கினர்.இந்த கலைஞர்களில் 110 பேர் தமிழகத்தைச் சார்ந்தவர்கள்.





latest tamil news







ஒன்பது நாட்களில் முதல் இரண்டு நாட்கள் மட்டுமே மழை இல்லாமல் இருந்தது அதன் பிறகு நாள்தவறாமல் மழை பெய்தது அதிலும் கருட சேவையின் போது குழாயினை திறந்துவிட்டது போல மழை கொட்டியது ஆனாலும் இந்த மழையைப் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நனைந்தபடியே சுவாமி தரிசினம் செய்தனர்.






latest tamil news







புதிய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி முதல் முறையாக பெருமாளுக்கு பட்டு வஸ்திரம் சாத்துவதற்கு வந்ததால் கூடுதல் அலங்காரங்களுடன் திரு மலை ஜொலித்தது.




பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நடத்தப்படும் பூங்காவில் இந்த வருடம் அத்தி வரதர் நின்ற சயன மற்றும் நீருக்குள் இருக்கும் கோலங்கள் இடம் பெற்று மக்கள் வரவேற்பை பெற்றது.




எத்தனை லட்சம் பேர் வந்தாலும் அத்தனை பேரையும் சமாளிக்கும் விதத்தில் சுகாதாரமும் சுற்றுப்புறமும் பராமரிக்கப்பட்டது அங்குள்ள பொது கழிப்பறைகளின் சுத்தம்தான் மக்களை உண்மையிலேயே வியப்பிற்கு எடுத்துச் சென்றது.




வரக்கூடிய பக்தர்களின் இது போன்ற அடிப்படை தேவைகளையும் உணவு குடிநீர் போன்ற விஷயங்களையும் கவனித்துக் கொண்டால் எந்த கோயில் நிர்வாகமும் பாராட்டுப்பெறும் நிறைவு விழா முடிந்து திரும்பி பக்தர்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டது இன்னும் சிறப்பாகும்.

எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in





Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X