பொது செய்தி

இந்தியா

பஞ்சாப்பிற்குள் மீண்டும் பாக்., ட்ரோன்கள்

Updated : அக் 10, 2019 | Added : அக் 10, 2019 | கருத்துகள் (10)
Share
Advertisement

புதுடில்லி : பஞ்சாப் எல்லைக்குள் ஆயுதம் கடத்தி வந்த பாக்., ட்ரோன்கள் சமீபத்தில் பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் பஞ்சாப் எல்லைக்குள் பாக்., ட்ரோன்கள் பறப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.latest tamil newsகடந்த மாதம், இந்திய எல்லைக்குள் ஏகே 47 துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், சேட்டிலைட் போன்கள் உள்ளிட்டவற்றை சுமந்தபடி 8 ட்ரோன்கள் 10 நாட்களுக்கும் மேலாக பறந்து வந்துள்ளது. இந்த ட்ரோன்கள் ஒவ்வொன்றும் தலா 5 கிலோ வரையிலான பொருட்களை சுமந்து செல்லக் கூடியவை. இதனை கண்டுபிடித்த பஞ்சாப் போலீசார், அந்த ட்ரோன்களை சுட்டு வீழ்த்தினர். இது பற்றி எல்லை பாதுகாப்பு படையினரும் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், பஞ்சாப்பின் பெரோசிபூர் மாவட்டத்திற்கு மேல் பாக்.,ட்ரோன்கள் நேற்று (அக்.,09) பறந்ததை எல்லை பாதுகாப்பு படையினர் கண்டறிந்துள்ளனர். இப்பகுதியில் ட்ரோன்கள் பறப்பது கண்டுபிடிக்கப்படுவது கடந்த 3 நாட்களில் இது 2வது முறையாகும். இரவு 7.20 மணிக்கு ஹசர்சிங் வாலா கிராமத்தின் மீதும், 10.10 மணிக்கு டெண்டிவாலா கிராமத்தின் மீதும் ட்ரோன்கள் பறப்பது கண்டறியப்பட்டுள்ளது. முன்னதாக அக்., 7 ம் தேதி இரவு 3 முறை ட்ரோன்கள் பறப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பல டிரோன்கள் பாக்., எல்லைக்கு அருகே பறப்பதையும் பாதுகாப்பு படையினர் கண்டுள்ளனர்.


latest tamil news


இந்திய எல்லைக்குள் வந்த ட்ரோன்கள் திரும்பிச் செல்லாததால், இவர்கள் அட்டாரி எல்லை அருகே உள்ள கிராமத்தில் ட்ரோன்களை தரையிறக்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
காஷ்மீரில் 370 ரத்து செய்யப்பட்டதற்கு பழிவாங்குவதற்காக காஷ்மீரில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளுக்கு உதவுவதற்கு இந்த ஆயுதுங்கள் இந்திய எல்லைக்குள் கடத்தப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளிடம் முறையிட்டும் தோல்வியே கிடைத்ததால், பயங்கரவாதிகளை இந்திய எல்லைக்குள் ஊடுருவச் செய்து, தாக்குதலை நடத்த பாக்., திட்டமிட்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Chennai,இந்தியா
10-அக்-201923:32:10 IST Report Abuse
Raj innoru murai inthia ellaikul athu meeri nuzhainthaal suttu veezhthapadum enrdu raanuva mathiri koorinaar ... pechu pechaave thaan iruku nalla vaaila vadai sudaraanga
Rate this:
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
10-அக்-201916:45:32 IST Report Abuse
இந்தியன் kumar நமது எல்கையில் அனுமதி இல்லாமல் பறக்கும் போது சுட்டு வீழ்த்தலாம்.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
10-அக்-201916:15:39 IST Report Abuse
Endrum Indian இதெல்லாம் ஆயுதம் சப்ளை செய்யத்தான்???ஏற்கனவே ஒரு தடவை பிடித்தாகிவிட்டது மறுபடி மறுபடி வந்தால் எங்கிருந்து வருகின்றதோ அங்கு போய் ஒரு பாலக்கோடு சம்பவம் நிகழ்த்தினால் போச்சி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X