பொது செய்தி

தமிழ்நாடு

பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

Updated : அக் 10, 2019 | Added : அக் 10, 2019 | கருத்துகள் (5)
Advertisement

சென்னை: வெப்பச்சலனம் காரணமாக சென்னை, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.






சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: தமிழகம் மற்றும் புதுவையில் பிற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை, கோவை, ஈரோடு, நீலகிரி, சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களைப் பொறுத்தவரை ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





அதன்படி, சென்னை, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. சென்னையில் மீனம்பாக்கம், குரோம்பேட்டை, தாம்பரம், வேளச்சேரி, அனகாபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளிலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி, கோட்டைமேடு, அரண்மனைமேடு, கண்ணார்பட்டி, கல்லுப்பட்டி, பசும்பொன் பகுதிகளிலும் மழை பெய்தது. இதேபோல், மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம், அவனியாபுரம், திருநகர், கூத்தியார்குண்டு, வில்லாபுரம், நிலையூர் பகுதிகளில் கனமழை பெய்தது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
த. மோகன சுந்தரம் ஆப்பு தெளிவாக தான் பேசுறாப்ள..
Rate this:
Share this comment
Cancel
10-அக்-201916:07:22 IST Report Abuse
ஆப்பு மழை மேகங்களுக்கு சென்னை, மாமல்லபுரத்துக்கு வர தடை போட முடியாது.
Rate this:
Share this comment
Cancel
10-அக்-201916:07:28 IST Report Abuse
ஆப்பு மழை மேகங்களுக்கு சென்னை, மாமல்லபுரத்துக்கு வர தடை போட முடியாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X