சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அமைச்சர் முற்றுகை

Added : அக் 10, 2019 | கருத்துகள் (4)
Advertisement
அமைச்சர், முற்றுகை, கெரோ, புதியதமிழகம்,

திருநெல்வேலி: நாங்குநேரி இடைத்தேர்தலில் புதிய தமிழகம் கட்சி கொடியை பயன்படுத்துதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் வெல்லமண்டி நடராஜனை முற்றுகையிட்டு புதிய தமிழகம் கட்சியினர் முற்றுகை இட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அ.தி.மு.க.,கூட்டணியில் உள்ள புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஜான்பாண்டியன் ஆகிய தலைவர்கள் இன்னமும் ஆதரவு தெரிவிக்கவில்லை.
மூலைக்கரைப்பட்டியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், துண்டுபிரசுரங்கள் கொடுத்து பிரசாரத்தி்ல் ஈடுபட்டார். அதில் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி படம் இருந்தது.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த புதிய தமிழகம் ஒன்றிய செயலாளர் தளவாய்பாண்டி உள்ளிட்ட கட்சியினர் அமைச்சர் உள்ளிட்ட அ.தி.மு.க.,வினரை கெரோ செய்தனர்.
இனி கொடியையோ, வண்ணத்தையோ பயன்படுத்தக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதன் பிறகு துண்டுபிரசுரம் வழங்கமாட்டோம் என அமைச்சர் தெரிவித்ததால் கலைந்துசென்றனர். சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva - Aruvankadu,இந்தியா
10-அக்-201920:32:35 IST Report Abuse
Siva வெல்லமண்டி.... இந்த பெயரே மிக பெரிய கேவலமாக இல்லையா.... வண்டு முருகன் தேங்காய் கடை இன்னும் இருக்கு டைப் அடிக்க போரடிக்குது...
Rate this:
Share this comment
Muruga Vel - Mumbai,இந்தியா
11-அக்-201905:56:04 IST Report Abuse
 Muruga Velதிருச்சியில் வெல்லமண்டி முக்கியமான மார்க்கெட் பகுதி ..இதில் என்ன கேவலத்தை கண்டீர்கள் …....
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
10-அக்-201918:25:55 IST Report Abuse
D.Ambujavalli துக்கினியூண்டு கட்சிகளெல்லாம் ஆதரிப்பதாகக் காட்டிக்கொள்ளுமளவுக்குத்தான் ஆளும் கட்சியின் அழகு இருக்கிறது போலும்
Rate this:
Share this comment
Ramesh Lal - coimbatore,இந்தியா
11-அக்-201900:57:08 IST Report Abuse
Ramesh Lalஐயா , சின்ன கட்சியோ, பெரிய கட்சியோ, யாராகஇருந்தாலும் அதன் தலைவரிடம் பேசி, கப்பம் கட்டி , ஒப்புதலுடன் அவர் படம் போட்டிருக்கவேண்டும், அந்த நீட் ஆதரவாளரின் ஒப்புதல் இல்லாமல் படம் போட்டது சரியல்ல....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X