அமைச்சர் முற்றுகை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அமைச்சர் முற்றுகை

Added : அக் 10, 2019 | கருத்துகள் (4)
அமைச்சர், முற்றுகை, கெரோ, புதியதமிழகம்,

திருநெல்வேலி: நாங்குநேரி இடைத்தேர்தலில் புதிய தமிழகம் கட்சி கொடியை பயன்படுத்துதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் வெல்லமண்டி நடராஜனை முற்றுகையிட்டு புதிய தமிழகம் கட்சியினர் முற்றுகை இட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அ.தி.மு.க.,கூட்டணியில் உள்ள புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஜான்பாண்டியன் ஆகிய தலைவர்கள் இன்னமும் ஆதரவு தெரிவிக்கவில்லை.
மூலைக்கரைப்பட்டியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், துண்டுபிரசுரங்கள் கொடுத்து பிரசாரத்தி்ல் ஈடுபட்டார். அதில் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி படம் இருந்தது.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த புதிய தமிழகம் ஒன்றிய செயலாளர் தளவாய்பாண்டி உள்ளிட்ட கட்சியினர் அமைச்சர் உள்ளிட்ட அ.தி.மு.க.,வினரை கெரோ செய்தனர்.
இனி கொடியையோ, வண்ணத்தையோ பயன்படுத்தக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதன் பிறகு துண்டுபிரசுரம் வழங்கமாட்டோம் என அமைச்சர் தெரிவித்ததால் கலைந்துசென்றனர். சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X