அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்திற்கு வருவோரை 'கோ பேக்' கூறி அனுப்பாதீர்: கமல்

Updated : அக் 10, 2019 | Added : அக் 10, 2019 | கருத்துகள் (80)
Share
Advertisement

சென்னை: தமிழகத்திற்கு வருவோரை வரவேற்க வேண்டும், பிடிக்கவில்லை என்பதற்காக 'கோ பேக்' எனக்கூறி திருப்பி அனுப்பாதீர்கள் என மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.



latest tamil news


சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மையம் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனை, உலக பாட்மின்டன் சாம்பியன் பி.வி.சிந்து, திடீரென சந்தித்தார். பின், இருவரும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். சந்திப்பு குறித்து சிந்து கூறுகையில், கமல்ஹாசன் நல்ல நடிகர் மற்றும் நல்ல அரசியல் தலைவர் என்பதால் அவரை சந்தித்தேன், என்றார். பின் நிருபர்களிடம் கமல்ஹாசன் பேசியதாவது: பேனர் வைக்கக் கூடாது என நான் சொல்ல மாட்டேன். சினிமாவை தொழிலாக கொண்ட நான் அவ்வாறு கூறுவது சரியாக இருக்காது. சட்டப்பூர்வ அனுமதி பெற்ற இடங்களில் பேனர் வைக்கலாம்.


latest tamil news


60 ஆண்டுகளுக்கு பிறகு சீன அதிபர் ஒருவர் மாமல்லபுரம் வருவது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு. தமிழகம் வருவோரை வரவேற்க வேண்டும்; பிடிக்கவில்லை என்பதற்காக 'கோ பேக்' எனக்கூறி திருப்பி அனுப்பக்கூடாது. சீன அதிபரின் வருகையை வெற்றி விழாவாக மாற்றுவது நம் கடமை. இந்திய - சீன நாட்டு தலைவர்கள் மக்கள் நலனுக்காக எடுக்கும் எந்தவொரு முடிவானாலும் அது வெற்றி பெற வாழ்த்துகிறேன். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (80)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
konanki - Chennai,இந்தியா
11-அக்-201910:39:53 IST Report Abuse
konanki சீன அதிபரின் வருகையை பற்றி இது வரைக்கும் தமிழக CPM கட்சி வாயே திறக்கவில்லை
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
11-அக்-201910:36:43 IST Report Abuse
konanki மோடி சீனா போன போது ஒரு ஸ்பூன் டி கொடுத்து அனுப்பினார் என்று நேரடியாக பார்த்து உலகறிய செய்த ஆப்புக்கு கோடி நன்றிகள்.
Rate this:
Cancel
jagan - Chennai,இந்தியா
11-அக்-201905:56:44 IST Report Abuse
jagan "சீன அதிபரின் வருகையை வெற்றி விழாவாக மாற்றுவது நம் கடமை" - அதவாது வெளிநாட்டு அடிவருடி இடது சாரிகள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X