பொது செய்தி

இந்தியா

புதுச்சேரி மாணவனுக்கு மோடி பாராட்டு

Updated : அக் 10, 2019 | Added : அக் 10, 2019 | கருத்துகள் (15)
Advertisement

வில்லியனுார்; 'துாய்மை இந்தியா' திட்டம் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதும் போட்டியில், அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்த புதுச்சேரி அரசு பள்ளி மாணவனுக்கு, பிரதமர் மோடி பரிசு வழங்கி பாராட்டினார்.


புதுச்சேரி மாநிலம் வில்லியனுார் அடுத்த சேந்தநத்தம் அரசு தொடக்கப் பள்ளியின் நான்காம் வகுப்பு மாணவர் விஷ்வா. அதே பகுதி மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த டிரைவர் சுகுமார்-வாசுகி தம்பதியின் மகன்.
இவர், 'துாய்மை இந்தியா' உருவாக்கும் நோக்கில், குப்பைகளை தரம் பிரித்தல் பற்றிய கருத்துகளை கடிதம் எழுதி, பிரதமருக்கு அனுப்பும் போட்டியில் பங்கேற்றார். மாணவன் விஷ்வா எழுதிய கடிதம், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் மூலமாக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இப்போட்டியில் நாடு முழுவதும் இருந்து மாணவர்கள் பங்கேற்றனர். அதில் இந்திய அளவில், விஷ்வா எழுதிய கடிதத்திற்கு முதல் பரிசு கிடைத்தது.
கடந்த 2ம் தேதி, குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடந்த காந்தி ஜெயந்தி விழாவில், பிரதமர் மோடி, மாணவன் விஷ்வாவிற்கு பரிசு வழங்கி கட்டித் தழுவி பாராட்டினார். புதுச்சேரிக்கும், சேந்தநத்தம் கிராமத்திற்கும் பெருமை சேர்த்த மாணவன் விஷ்வாவை கிராம மக்கள் பாராட்டினர்.


என்ன சொல்கிறார் தலைமையாசிரியை ?


பள்ளி தலைமையாசிரியை செல்வி கூறியதாவது:
மழலையர் வகுப்பில் இருந்தே விஷ்வா, புத்திசாலியாக, துருதுருப்பாக இருப்பார். பன்முக திறமை கொண்டவர். தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டியில் விஷ்வா முதலிடம் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
சேந்தநத்தம் அரசு தொடக்கப் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் பெரும்பாலும் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள்தான். மாணவர்களின் தனித்திறமைகளைக் கண்டறிந்து, வெளிக்கொணர்வதில் இப்பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பெரும்பங்கு வகிக்கின்றனர்.

புதுச்சேரி அரசு பள்ளிகளில், இப்பள்ளி முன்னுதாரணமாக விளங்கி வருகிறது. கடந்த நான்காண்டுகளில் இப்பள்ளி மாணவர்கள் மாநில அளவில் பல பரிசுகளை வென்று சாதனை படைத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆல்வின், பெங்களூர் இது என்ன பாராட்டு. எங்கள் தலைவர் பேரபிள்ளை இன்பநிதி பிறக்கும் போதே இளைஞர் அணி செயலாளர் ஆக பிறந்து தமிழக மக்களுக்கு தொண்டு செய்து வருகின்றார். இதுதான் தமிழன் படித்த கலைஞரின் பகுத்தறிவு.
Rate this:
Share this comment
Cancel
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
11-அக்-201907:07:18 IST Report Abuse
வல்வில் ஓரி வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் (70) தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட வித்தக விநாய கனின் கருணையால் வாழ்த்துகிறேன்.
Rate this:
Share this comment
Cancel
B.s. Pillai - MUMBAI,இந்தியா
11-அக்-201904:17:15 IST Report Abuse
B.s. Pillai Congrates Master Vishwam. The parents also deserve congratulations. " Vazhha vazhamudan " The school and its teachers also need praise for encouraging the students to shine. It is a Govt. School and it proves that the standard in Govt. schools are nothing less than private run English medium school. My heearty congrtulations to the boy once again and everyone involved in achieving this . We do not lose this opportunity to wish our hon.PM. also who is doing his best to the students every time.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X