பொது செய்தி

இந்தியா

தனியார்மயமாகும் 150 ரயில்கள்?

Updated : அக் 10, 2019 | Added : அக் 10, 2019 | கருத்துகள் (82)
Advertisement

புதுடில்லி: 150 ரயில்கள் மற்றும் 50 ரயில் நிலையங்களை தனியார் வசம் ஒப்படைப்பதற்காக, சிறப்பு குழு ஒன்றை உருவாக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.






உ.பி., மாநிலம், லக்னோ - டில்லி இடையே, அதி நவீன வசதிகளை கொண்ட, தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில், கடந்த அக்.,4ல் துவக்கி வைக்கப்பட்டது. இந்த ரயிலை இயக்கும் பொறுப்பு, ஐ.ஆர்.சி.டி.சி., வசம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மூலம் நாட்டின் முதல் தனியார் ரயில் என்ற பெருமையை இந்த ரயில் பெற்றது. இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்றால், ரயில் சேவையில், மேலும் பல தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்த, ரயில்வே நிர்வாகம் முடிவு செய்திருந்தது.





இந்நிலையில், தற்போது மேலும் 150 ரயில்கள் மற்றும் 50 ரயில் நிலையங்களை தனியார் வசம், மத்திய அரசு ஒப்படைக்க உள்ளது. இதற்காக உயர் அதிகாரம் கொண்ட சிறப்பு குழு ஒன்றையும் மத்திய அரசு அமைக்க உள்ளது. இக்குழுவில் ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் மற்றும் நிடி ஆயோக் தலைமை அதிகாரி அமிதாப் கான்ட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும், இக்குழுவில் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை செயலாளர் ஆகியோரும் இடம் பெறுவார்கள்.

Advertisement




வாசகர் கருத்து (82)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Asagh busagh - Munich,ஜெர்மனி
17-அக்-201912:25:05 IST Report Abuse
Asagh busagh இது ஒன்னும் கல்லிலே பதித்த காண்ட்ராக்ட் இல்ல. தனியாருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து தான் பார்ப்போமே. அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் ஏற்படும் அழுக்கில் புரண்டு பழகியவனுகளுக்கு தனியாரின் சுத்த விதிகளை மதிக்கணுமே. அலர்ஜியா தான் இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
16-அக்-201916:06:15 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan அருமையான முடிவு. இலாபகரமான துறையாக மாறும். அரசு வசம் உள்ள எல்லா நிறுவனமும் நஷ்டம்தான். திறமையற்றவர்கள் இட ஒதுக்கீட்டு கொள்கையில் வேலைக்கு வந்து விடுகின்றனர். அவர்கள் என்ன தவறு செய்தாலும் வேலை நேரத்தில் தூங்கினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கமுடியாத சட்டச் சிக்கல்கள். அதனால் தனியார் வசமிருந்தால் நேர்மையான நிர்வாகம் பயணிகளுக்கு தேவையான வசதிகள் ஏற்படும். வரிசையாக எல்லா அரசு துறைகளையும் தனியார் மயமாக்கினால் நாடு முன்னேறும்.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
14-அக்-201916:57:38 IST Report Abuse
Endrum Indian இதை தனியார்மயமாக்கக்கூடாது என்றால் எனக்கு ஒரு கேள்வி தோன்றுகின்றது அப்போ அதிமுக முதல் பி ஜெ பி வரை எல்லாம் தனியார் மயம் தானே அவர்களையும் நாம் அரசு கட்சி செய்தால் என்ன (தேர்தல் கமிஷன் அங்கீகாரம் எல்லாம் வேறு விஷயம்) ரெண்டே கட்சி பெயர் அரசு மயமாக்கப்படவேண்டும் அவர்கள் தான் தேர்தலில் நிற்கவேண்டும் .................இப்படி செய்தால் என்ன???
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X