பொது செய்தி

தமிழ்நாடு

விருதை சி.வி.எஸ்., சாலையில் ரவுண்டானா அமைக்கப்படுமா?

Added : அக் 10, 2019
Advertisement
 விருதை சி.வி.எஸ்., சாலையில் ரவுண்டானா அமைக்கப்படுமா?

விருத்தாசலம்: விருத்தாசலம் - கடலுார் சாலை, புறவழிச் சாலைகள் சந்திப்பில் சாலை விபத்துக்களை தடுக்க ரவுண்டான அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.விருத்தாசலம் நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கடந்த 2011ல் சேலம் புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. அதேபோல், கடந்த இரண்டாண்டுகளுக்கு முன் உளுந்துார்பேட்டை புறவழிச்சாலை அமைக்கப்பட்டது.சி.வி.எஸ்., எனப்படும் கடலுார் - விருத்தாசலம் - சேலம் நெடுஞ்சாலையை, 532 தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டு, கடந்த இரண்டாண்டுகளுக்கு முன் 252 கோடியில் தரம் உயர்த்தப்பட்டது.விருத்தாசலத்தில் இரண்டு புறவழிச்சாலைகளும் சந்திக்கும் இடத்தில் தேசிய நெடுஞ்சாலை சார்பில் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டது.இதில், விருத்தாசலம் - கடலுார் சாலைகளில் வாகனங்கள் செல்ல ஏதுவாக இல்லை. இதனால், அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே, இப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள சென்டர் மீடியனை அகற்றி, ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X