பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு அங்காடிகள் பட்டாசு விற்பனை

Added : அக் 10, 2019
Advertisement

சென்னை:தீபாவளியை முன்னிட்டு, பல்பொருள் அங்காடி வளாகங்களில், குறைந்த விலைக்கு பட்டாசு விற்பனை செய்ய, கூட்டுறவுத்துறை முடிவு செய்துள்ளது.

கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு விற்பனை பண்டக சாலைகள், காமதேனு, சிந்தாமணி உள்ளிட்ட பெயர்களில், 200க்கும் மேற்பட்ட பல்பொருள் அங்காடிகளை நடத்தி வருகின்றன.மேலும், மருந்தகங்கள், பெட்ரோல் பங்க்குகள், பண்ணை பசுமை காய்கறி கடைகளையும் நடத்துகின்றன. பெட்ரோல் பங்க் தவிர்த்த மற்ற கடைகளில், சற்று குறைந்த விலையில், பொருட்கள் விற்கப்படுகின்றன.

ஹிந்துக்களின் முக்கிய பண்டிகையான, தீபாவளி, வரும், 27ல் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, பல்பொருள் அங்காடி வளாகங்களில், குறைந்த விலையில், பட்டாசு விற்பனை செய்ய, கூட்டுறவுத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, தீயணைப்பு துறை உள்ளிட்ட துறைகளிடம் அனுமதி பெறுவதற்கான பணிகளில், தற்போது, கூட்டுறவு துறை அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X