பொது செய்தி

இந்தியா

உலகை அசைப்போம் உயர்ந்து வா; அக்கினி சிறகே எழுந்து வா...

Added : அக் 10, 2019
Share
Advertisement
உலகை அசைப்போம் உயர்ந்து வா; அக்கினி சிறகே எழுந்து வா...


இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம்

பெண்கள் இன்று பல்வேறு துறைகளில் முத்திரை பதிக்கின்றனர். ஆனால் மறுபுறம் பெண் குழந்தைகள் மீதான சிசுக்கொலை, குழந்தை திருமணம், சமஉரிமையின்மை, பாலியல் தொந்தரவு உள்ளிட்ட வன்கொடுமைகளும் தொடர்கின்றன. உலகம், சமூகம் மற்றும் குடும்பத்தில் பெண் குழந்தைகளுக்கு சம உரிமை வழங்க வலியுறுத்தி அக்., 11ல், சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

பெண் குழந்தைகள் கல்வி கற்பதன் மூலம், இச்சமூகம் முன்னேற்றம் அடையும். மாற்றத்தை கொண்டு வருவதற்கான வல்லமை பெண் குழந்தைகளிடம் இருக்கிறது. அனைத்து துறைகளிலும் அவர்களது பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும்.


குறையும் விகிதம்:

இந்தியாவில் 2011 சென்சஸ் படி, 1000 ஆண்களுக்கு 940 பெண்கள் உள்ளனர். ஆனால் 1 முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பாலின விகிதம் 1,000 ஆண் குழந்தைகளுக்கு, 914 என மிக குறைவாக உள்ளது. இது 2001ல் 927 ஆக இருந்தது.அதே போல தமிழகத்தில் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு 995 பெண்களாக உள்ளது. 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் பாலின விகிதம் 946 ஆக உள்ளது. இதிலிருந்து பெண் குழந்தைகள் காக்கப்பட வேண்டிய அவசியம் புரிகிறது. குடும்பத்தில் 'மருமகள் தேவைப்படும் போது, மகள் வேண்டாமா?' என்பதை சிந்திக்க வேண்டும்.


மாற்றம் கட்டாயம்:

பெண் சிசுக்கொலைகளுக்கு, வரதட்சணை முக்கிய காரணமாக விளங்குகிறது. திருமணத்துக்கு பணம் சேர்க்க வேண்டும் என்பதால் பெண் குழந்தைகளை சுமையாக கருதினர். தற்போது மாற்றம் ஏற்பட ஆரம்பித்துள்ளது. வரதட்சணை கேட்காமல் திருமணம் செய்யும் இளைஞர்கள் பலர் உள்ளனர். இது அனைத்து இடங்களிலும் பரவலாக வேண்டும். பெண் குழந்தைகளை துன்புறுத்த நினைப்பவர், தானும் ஒரு பெண்ணால் பூமிக்கு வந்தோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.


என்ன செய்யலாம்?

* குடும்பத்தில் ஆண் குழந்தைகளுக்கு, சமமாக பெண் குழந்தைகளை நடத்த வேண்டும்.
* பெண் குழந்தைகள் சுமையல்ல... வரம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
* பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்தி தருதல்.
* பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல்.
* பெண் குழந்தை மீதான உடல், மனம் மற்றும் பாலியல் துன்புறுத்தல்களை முற்றிலும் தடுத்தல்.
* படிப்பை முடிக்கும் மாணவிகளுக்கு, சுயதொழில் அல்லது வேலைவாய்ப்பு பயிற்சி அளித்தல்.

* பாலின சமத்துவத்தை வலியுறுத்துவது, குழந்தை திருமணத்தை அறவே ஒழிப்பது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X