நான் தப்பு செய்யவில்லை: ராகுல் வாதம்

Updated : அக் 12, 2019 | Added : அக் 10, 2019 | கருத்துகள் (56)
Advertisement
Rahul,தப்பு,செய்யவில்லை,ராகுல்,வாதம்

சூரத் : அவதுாறு வழக்கில் ஆஜரான, காங்., முன்னாள் தலைவர், ராகுல், 'நான் தப்பு செய்யவில்லை' என, கூறினார்.

லோக்சபா தேர்தலின்போது, கர்நாடக மாநிலத்தில், ஏப். 13ல் பிரசாரம் செய்த, காங்., முன்னாள் தலைவர் ராகுல், 'அனைத்து திருடர்களின் பெயர்களும் மோடி என்று இருப்பது எப்படி?' என, பிரதமர் நரேந்திர மோடியைக் கிண்டல் செய்யும் வகையில் பேசினார். இதை எதிர்த்து, குஜராத் மாநில, பா.ஜ.,- எம்.எல்.ஏ.,வான பர்னேஷ் மோடி வழக்கு தொடர்ந்திருந்தார். குஜராத் மாநிலம், சூரத் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், விசாரணை நடக்கிறது.

ஜூலையில் நடந்த விசாரணையின்போது, நேரில் ஆஜராக, ராகுலுக்கு விலக்கு அளிக்கப்பட்டது; அக்டோபர், 10ல் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அதன்படி, நீதிமன்றத்தில், ராகுல் நேற்று ஆஜரானார். அப்போது அவரிடம், 'குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொள்கிறீர்களா?' என, நீதிபதி கேட்டார். 'நான், தப்பு ஏதும் செய்யவில்லை' என, ராகுல் பதிலளித்தார்; அது பதிவு செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து, 'நேரில் ஆஜராக, நிரந்தரமாக விலக்கு அளிக்க வேண்டும்' என, ராகுல் தரப்பில் மனு கொடுக்கப்பட்டது. இதற்கு, பர்னேஷ் மோடி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், எதிர்ப்பு தெரிவித்தார். இது குறித்து, டிசம்பர், 10ல் விசாரிக்கப்படும் என அறிவித்த நீதிமன்றம், அன்றைய தினம் ஆஜராவதில் இருந்து, ராகுலுக்கு விலக்கு அளிப்பதாக கூறியது.

''நான் பேசாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, அரசியல் எதிரிகள் வேண்டுமென்றே வழக்கு தொடர்ந்துள்ளனர். நீதிமன்ற வளாகத்துக்கு வந்திருந்த காங்கிரஸ் தொண்டர்களின் ஆதரவு மற்றும் அன்புக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்''

- ராகுல், சமூக வலை தளத்தில் கருத்து

Advertisement




வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
12-அக்-201900:17:08 IST Report Abuse
Pugazh V இங்கே சும்மா ஓலப்பாயில் ஒன்றுக் கிருந்தாற்போல சளசளவென்று பிதற்றி எழுதியவர்கள் முகத்தில் நீதிமன்றம் கரிபூசப் போகிறது. அப்போது நீதிபதி மீது அவதூறு எழுதுவார்கள்
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
12-அக்-201900:14:43 IST Report Abuse
Pugazh V கட்டுமரக்குடும்பம் இன்று பல லட்சம் கோடிகளுக்கு அதிபதி.. எப்படி ?// நீங்கள் தான் பெரிய அறிவாளிகளாச்சே..எப்படின்னு கண்டுபுடிங்க. தவறான வழியில் என்றால் சட்டத்தின் முன் நிரூபியுங்கள். எப்படி தெரியுமா? ஜெயலலிதா அடித்த கொள்ளைகளை நிரூபித்த மாதிரி. நாப்பது வருஷமா முக்கியும் முடியவில்லை அல்லவா? அப்ப வாயை மூடுங்கள். அறிவுகெட்டத்தனமாக சும்மா சும்மா க.மரகுடும்பம் கொள்ளை என்று பெனாத்தறதை நிறுத்தும். உமக்கே மடத்தனமாக தெரியவில்லை???
Rate this:
Share this comment
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
11-அக்-201922:01:57 IST Report Abuse
madhavan rajan சொன்னால் நம்புங்க. பப்பு செய்யமாட்டார் தப்பு. அப்பப்போ உதறிவிட்டு நீதிமன்றத்தில் வந்து மன்னிப்பு கேட்பார். அவ்வளவுதான். மற்றபடி அவர் கூறுவதை அவருடைய கட்சியினரே சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை. விட்டுவிடுங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X