ரூ.740 கோடி மோசடி: ரான்பக்ஸி மாஜி தலைவர்கள் கைது

Updated : அக் 11, 2019 | Added : அக் 10, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement

புதுடில்லி: ரூ. 740 கோடி மோசடி செய்த புகாரில் ரான்பாக்ஸி நிறுவன முன்னாள் தலைவரான ஷிவிந்தர் சிங், அவரது சகோதரர் மல்வீந்தர் சிங் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பற்பசை முதல் வலிநிவாரணி போக்கும் மருந்து உள்ளிட்ட பல்வேறு மருந்துகளை தயாரித்து வரும், முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான ரான்பாக்ஸி நிறுவனம். உலகளவில் 150 நாடுகளில் கிளைகளும், 50 வருட முன் அனுபவமும் கொண்டது. நிறுவனத்தின் புரமோட்டர்களான மல்விந்தர் சிங் மற்றும் அவரது சகோதரர் ஷிவிந்தர் சிங், ரெலிகர் நிறுவனத்திற்காக ரூ. 740 கோடி கடன் பெற்றனர்.



latest tamil news



latest tamil news



எனினும் நிதி நெருக்கடி காரணமாக ரான்பாக்ஸி நிறுவனத்தை, ஜப்பானை சேர்ந்த, மருந்து பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றிற்கு 2008ம் ஆண்டு விற்றனர்.

2018 டிசம்பர் மாதம், ரூ 740 கோடி மோசடி செய்ததாக, சிங் சகோதரர்கள் மீது புதுடில்லி காவல் நிலையத்தில் பொருளாதார குற்றத்தின் கீழ் புகார் அளித்திருந்ததை தொடர்ந்து, இவர்கள் மீது கடந்த மே மாதம் , அமலாக்க இயக்குநரகத்தின் கீழ், நிதி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில், இரு சகோதரர்களான ஷிவிந்தர் சிங் , மல்விந்தர் சிங் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TechT - Bangalore,இந்தியா
11-அக்-201911:13:13 IST Report Abuse
TechT ஒன்னு ...ரெண்டு.... ஊழல் ...அப்படின்னு வருவதில்லை நூறு கோடி ....ஐநூறு கோடி ....... யப்பப்பா ....நாம ஹோட்டல் சாப்பாடு 150 ரூபா கொடுத்து சாப்பிடணுமான்னு யோசிக்கிறோம்.
Rate this:
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
11-அக்-201907:41:29 IST Report Abuse
அம்பி ஐயர் வழக்குப் பதிவு செய்வதற்கே பத்து ஆண்டுகள்.... இன்னும் வழக்கு நடத்தி..... தண்டணை வாங்கிக் கொடுக்க எத்தனை மாமாங்கம் ஆகுமோ....
Rate this:
Cancel
மணி - புதுகை,இந்தியா
11-அக்-201905:44:31 IST Report Abuse
மணி வட இந்தியர்கள் என்றாலே ஊழல்தான்
Rate this:
Sampath Ranganathan - New Delhi,இந்தியா
11-அக்-201918:20:00 IST Report Abuse
Sampath Ranganathanதமிழ் நாட்டுல ஊழல் அப்படின்னா என்னவென்றே தெரியாதவர்கள் பாவம்...
Rate this:
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
12-அக்-201904:45:48 IST Report Abuse
 nicolethomsonஇலவச டிவியில் இன்னைக்கு என்ன படம் mani? ஓஹோ படம் சரியில்லையா jio கொடுத்த இலவச 1gb டேட்டாவில் அரசுகொடுத்த இலவச லேப்டாப்பை வைத்து படம் பார்த்தீர்களா? அடக்கடவுளே இலவசமும் ஊழலும் வேறு வேறு அல்லவா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X