பொது செய்தி

தமிழ்நாடு

'விஸ்கி தான் எனக்கு பிடிச்ச சரக்கு

Added : அக் 11, 2019 | கருத்துகள் (13)
Share
Advertisement
 'விஸ்கி தான் எனக்கு பிடிச்ச சரக்கு

சென்னை:''நான், விஸ்கியின் மிகப் பெரிய காதலி; தற்போது, மது குடிப்பதை நிறுத்தி விட்டேன்,'' என, நடிகை ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார்.தெலுங்கு நடிகை லட்சுமி மஞ்சு நடத்தி வரும், இணையதள நிகழ்ச்சி ஒன்றில், சிறப்பு விருந்தினராக, நடிகர் கமலின் மகள், ஸ்ருதி ஹாசன் பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில், அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தே, எல்லா கேள்விகளும் கேட்கப்பட்டன.அவற்றுக்கு, ஸ்ருதி அளித்த பதில்:நான் மிகவும், 'கூல்' ஆன பெண். அதேவேளையில், சில சமயம் உணர்ச்சி வசப்படவும் செய்வேன். நல்லவர்கள், நன்றாகவே நடக்கின்றனர். சில சமயங்களில், தவறும் செய்கின்றனர். எனக்கு ஏற்பட்டது, நல்ல அனுபவம். இது, ஒன்றும் சினிமா காதல் இல்லை. இதற்காகத் தான் காத்திருந்தேன் என, இந்த உலகத்திற்கு அறிவிக்க காத்திருக்கிறேன்.நான், 'விஸ்கி'யின் மிகப்பெரிய காதலி; விரும்பி குடிப்பேன். ஒரு சந்தர்ப்பத்தில், விஸ்கி உட்பட அனைத்தையும் நிறுத்தி விட்டேன். அது, என்னிடம் நடந்த பெரிய மாற்றம். என் உடல்நிலை சரியில்லாமல் போன போது, அதை, நான் யாரிடமும் சொல்லவில்லை; சிகிச்சைக்கு பின் சரியானேன். மற்றவர்கள் பேசுவதைப் பற்றி, எனக்கு கவலையில்லை. ஏற்கனவே நடித்த கதாபாத்திரங்களே, மீண்டும் கிடைப்பதால், அதுபோன்ற படங்களில் நடிப்பதில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jit Onet - New York,யூ.எஸ்.ஏ
15-அக்-201921:42:07 IST Report Abuse
Jit Onet சுருதி ஹாசனை கன்னாபின்னாவென்று பேசுபவர்களை கேட்கிறேன்: 1 ) ஏன் ஆண் நடிகர்கள் குடித்தால் அது பெரிய ஆளுக்கு வந்த சோதனை / விதி, ஆனால் பெண் அப்படி செய்தால் அது வளர்ப்பா ? 2 ) அவர் நிறுத்திவிட்டேன் என்கிறார் - அதற்கு மிக மனவலிமை வேண்டும் அதற்கு ஏன் வாழ்த்தவில்லை அவரை? 3 ) எம்ஜிஈயாரும் கருணாநிதியும் செய்யாத காமந்தகாரமா அவர்களை பெரிய தலைவர்கள் என்று வைத்து கொண்டாடிநீர்களே, ஏன் கமலஹாசனை மட்டும் இப்படி பேசவேண்டும் ? காட்டுமிராண்டித்தனம்தான் தமிழர் கலாச்சாரமாக கருதுகிறீர்களா ? அடுத்தவர்களை ஏசாமல் போய் உங்க குழந்தைகளை சரியாக வளருங்கள் பாவம் இந்த பெண் என்னெல்லாம் வேதனை பட்டதோ அது வளரும்போது
Rate this:
Cancel
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
13-அக்-201908:46:29 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி உனது வளர்ப்புத் தந்தை கமலைவிட நீ மோசம்போல் தெரிகிறது.
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
12-அக்-201918:59:10 IST Report Abuse
Sampath Kumar அட அட அட அப்படி போடுடா அரிவாளை உண்மை சொன்னதற்கு உனக்கு பாராட்டுக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X