பொது செய்தி

தமிழ்நாடு

கைதிகளை ஆஜர்படுத்துவதில் விலக்கு

Added : அக் 11, 2019
Advertisement

சென்னை:'பிரதமர் மோடி - சீன அதிபர் வருகை காரணமாக, விசாரணை கைதிகளை, நாளை வரை நேரடியாக ஆஜர்படுத்துவதில் இருந்து, விலக்கு அளிக்க வேண்டும்' என, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதிக்கு, சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கடிதம் எழுதி உள்ளார்.

இதுதொடர்பாக, நீதிபதிக்கு அவர் எழுதியுள்ள கடிதம்: காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில், பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர், இன்றும், நாளையும் சந்திக்க உள்ளனர். இதையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எனவே, புழல் உள்ளிட்ட சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள விசாரணை கைதிகளை, போலீசார் அழைத்து சென்று, நீதிமன்றங்களில் நேரில் ஆஜர்படுத்த முடியாத சூழல் உள்ளது.

அதனால், 10, 11, 12 ஆகிய மூன்று நாட்களுக்கு, போலீசார் விசாரணை கைதிகளை, நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்துவதில் இருந்து, விலக்கு அளிக்க வேண்டும். அன்றைய தேதிகளில், விசாரணைக்கு வரும் வழக்குகளை, தள்ளி வைக்க பரிசீலிக்க வேண்டும்.ஏற்கனவே, கைதாகி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு, அவர்களின் நீதிமன்ற காவலை நீட்டிப்பதற்காகவும், பிற கைதிகளை, 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் ஆஜர்படுத்தவும், புழல் சிறை அதிகாரிகள் தயாராக உள்ளனர்.இவ்வாறு, கடிதத்தில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X