'பொருளாதார சரிவை சமாளிக்க துறைரீதியாக நடவடிக்கை'

Updated : அக் 12, 2019 | Added : அக் 11, 2019 | கருத்துகள் (21)
Advertisement
நிதியமைச்சர்,நிர்மலா,Nirmala,நிர்மலா சீதாராமன்,பொருளாதார சரிவு,துறைரீதியாக, நடவடிக்கை

மும்பை: ''பொருளாதார சரிவை சமாளிக்க, துறைரீதியாக தீர்வு காண, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது,'' என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

இது குறித்து, மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: பொருளாதார சரிவை சமாளிக்க, துறைரீதியாக தீர்வு காண அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. வருவாய் குறையும் என தெரிந்தும், கார்ப்பரேட் வரிகளை அரசு குறைத்து உள்ளது. ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடன் பெறும் வசதியை எளிதாக்குவது, வங்கிகளுக்கான மறு மூல தனத்தை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. அனைத்து துறைகளுக்கும், அரசு சலுகைகள் அளித்துள்ளது. இவ்வாறு, நிர்மலா சீதாராமன் கூறினார்.

இதற்கிடையே, மும்பையில் உள்ள, பி.எம்.சி., எனப்படும், பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி, ஹவுசிங் டெவலப்மெண்ட் மற்றும் இன்பிராஸ்ட்ரக்சர் லிமிடெட் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு, 6,500 கோடி ரூபாய் வரை கடன் வழங்கியுள்ளது. இது, ரிசர்வ் வங்கி விதித்துள்ள வரம்பை விட, நான்கு மடங்கு அதிகம்.

கடன் வழங்கியதில் முறைகேடுகள் இருப்பது தெரியவந்ததால், வங்கியின் செயல்பாடுகளை தணிக்கை செய்யவும், புதிய கடன் மற்றும் சேமிப்பு திரட்டுவதற்கும், ரிசர்வ் வங்கி தடை விதித்தது. வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை எடுக்கவும், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மும்பையில் உள்ள, பா.ஜ., அலுவலகத்துக்கு வெளியே, வாடிக்ககையாளர்கள், நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது, அலுவலகத்தில் இருந்த, நிர்மலா சீதாராமன், அவர்களை அழைத்துப் பேசினார்.

இப்பிரச்னை தொடர்பாக, ரிசர்வ் வங்கி கவர்னரிடம் உடனடியாக பேசுவதாகவும், நடவடிக்கை எடுப்பது குறித்து, ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிப்பதாகவும், நிர்மலா சீதாராமன் உறுதியளித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mohan - chennai,இந்தியா
11-அக்-201920:58:27 IST Report Abuse
mohan இந்தியாவில் ஏற்கனவே பல முறை கேடுகள்...இதில் GST என்கின்ற வலைப்பின்னல்..GST வருவதற்கு முன்னரே, தொழில் துறை சரிய ஆரம்பித்து விட்டது... அதாவது, இலவசங்களில்நாள், வேலை செய்வோர் எண்ணிக்கை குறைந்து விட்டது.. வேலை செய்வோர் எண்ணிக்கை குறைந்ததினால், சம்பளங்கள் பல மடங்கு, விலை வாசி எல்லாம் ஒரு சேர உயர்ந்து விட்டது.. இந்த உயர்வுக்கு ஏற்ப , விற்பனை யாகும் பொருளின் விலை கூட வில்லை... உல் நாட்டிலும் சரி, வெளி நாட்டிலும் சரி.. இந்த நிலையில் குறைவான லாபத்தோடு வியாபாரம் இயங்கி கொண்டு இருந்தது, GST வந்த பின்னர், அதன் முழு விபரம் தெரிய வில்லை, வரி விகிதம் அதிகம் என்று மட்டும் சொல்லி போராடி கொண்டு இருந்தனர்.. ஆனால், இந்தியாவில், அறுபது ஆண்டுகளுக்கு மேல், தொழில் துறை, அனைத்தும், 80 % வரை வெளி யில் இருக்கும், சிறு நிறுவனங்களை நம்பி, தங்களது தயாரிப்புகளை, நடத்தி வந்தன.. அமெரிக்காவில், ஆரம்பத்தில் தயாரான கார் கம்பெனிகள் அனைத்தும், தங்களது IN HOUSE தயாரிப்புகளாகவே இருந்தன.. அந்த மாதிரி இந்தியாவில் இல்லை. அணைத்து தொழில்களும், அரசாங்கத்தின் BHEL முதல் கொண்டு தனக்கு வெளி suplier களை கொண்டு இருந்தது.. GST வந்த பின், ஏற்கனவே குறை வான லாபத்தோடு இயங்கி கொண்டு இருந்த நிறுவனங்களின் இயங்கு மூலதன பணம், அனைத்தும் GST பின்னல் சென்று நின்று விட்டது.. அது என்பது சதவிகித நிறுவனங்களுக்கு திருப்பி வரவில்லை என்று சொல்கின்றனர்.. அது எவ்வளது தூரத்துக்கு உண்மை என்று தெரிய வில்லை... இதெல்லாம் போக... ஏன் இந்த திருப்பி தரும் முறையை தேர்ந்தெடுக்க வேண்டும்... நாட்டிற்கு வரி தேவை,,, அணைத்து முனைகளிலும், ஒரு சதவிகிதம், ஆரம்பத்தில் விதித்து விட்டு, பின்னர் படிப்படியாக தொழிலின் தன்மைக்கேற்ப வரியை அதிகரிக்கலாம்...ஒரு மகனை, அறுபது வயதான பெற்றோர், வளர்த்து டாக்டருக்கு ( GST மற்றும் தொழில் துறை ) படிக்க வைக்கின்றனர்... அந்த மகன், படித்து வெளியில் வந்து , என்ன பெற்றோரே... அறுபது வருடமாக என்ன செய்து கொண்டு இருந்தீர்கள், ஆறு மாதம் அவகாசம் தருகிறேன், நீங்கள், mbbs (GST ) படித்து மருத்துவம் பார்க்க வேண்டும்... அப்படி இல்லாவிட்டால், உங்களுக்கு சாப்பாடு கிடையாது.. வீடும் கிடையாது...நீங்கள் வெளியே போகலாம் என்று சொன்னால் அந்த பெற்றோருக்கு என்ன புரியும்.. அந்த நிலைதான் இன்றைக்கு தொழில் துறை... தொழில் துறையில் உள்ளோர் அதிக அளவில் படிக்காதவர்கள்... அது மட்டும் அல்ல...இன்றைக்கு தொழில் துறைக்கு பல்வேறு இன்னல்கள், பணியாளர்கள் மூலமாக...மற்றும் இதர இலவசங்கள் மூலமாக, இதில் லாபத்தோடு தொழில் செய்து வரி கட்டவேண்டும் என்பதே குதிரை கொம்பு... இதில் GST என்கின்ற வலை பின்னலை சரி செய்யா விட்டால், தொழில் துறை இயங்காது... ஒரு குறிப்பிட்ட தொகைக்கு கீழ் உள்ளோர்க்கு GST கிடையாது என்று சொல்கின்றனர்... அனால், அந்த குறிப்பிட்ட தொகைக்கு கீழ் உள்ள நிறுவங்கள், பெரு நிறுவனங்களில் இருந்து காசோலை வாங்கி யாக வேண்டும்... அந்த பெரு நிறுவனங்கள் எல்லாம், GST பில் தான் கேட்கின்றன.. GST பில் இல்லாவிட்டால், சிறு நிருவங்கள் தொழில் செய்ய இயலாத நிலை... எல்லாம் களைய பட வேண்டும்....இதில் கட்சியையோ, ஆட்சியை குறை சொல்ல வில்லை. மேல் மட்டத்தில் உள்ள தொழில் துறையினர் அரசுக்கு எடுத்து கூறி, இதை சரி செய்ய வேண்டும்... எல்லா முனையிலும், ஏற்றுக்கொள்ள கூடிய வழியில் வரி விதித்தால், யாரும் ஏமாற்ற போவதில்லை... சாதாரண சிறு நிறுவங்களின் முதலாளியில் இருந்து, விமானத்தில் செல்லும், பெரு நிறுவனத்தின், வட இந்தியா, தென் இந்தியா அணைத்து பெரு முதலாளிகளின் பேச்சும் இது தான்....தொழில் செய்ய முடிய வில்லை என்று... இதில் வரி வரு வாய் குறைகிறது என்றால், தொழில் நடக்க வில்லை என்று அர்த்தம்.. அர்த்தம் மட்டும் அல்ல... எந்த ஊருக்கு சென்றாலும், பல நிறுவங்கள் பெரிய பூட்டை போட்டு பூட்டி உள்ளன .. அல்லது தங்களின் கட்டிடங்களை வாடகைக்கு என்று தகவல் பலகை மாட்டி உள்ளனர்...இது எப்போது சீராவது... மிக கடினம்... மிக துரித மாக நடவடிக்கை எடுக்க வேண்டும்...இல்லாவிட்டால், என்பது சதவிகித நிறுவனங்கள் மூடும் அளவிற்கு சென்று விடும்...பின் வரி வருவாய் அதற்கேற்றாற் போல் தான் இருக்கும்...
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
12-அக்-201904:15:00 IST Report Abuse
Anandanயோவ், 2015 ல் இருந்து இந்திய பொருளாதாரம் தள்ளாட்டம், எல்லாம் உங்க வராது வந்த மாமணி வந்த பிறகுதான். அது சரி, என்ன நடந்தாலும் எதையாவது யாரையாவது குறை சொல்றதுதான் உங்க வழக்கம். திறமை இருந்தா ஏன் இப்படி குறை சொல்லி காலத்தை ஓட்டப்போறீங்க....
Rate this:
Share this comment
mohan - chennai,இந்தியா
12-அக்-201910:32:15 IST Report Abuse
mohanஇதில் யாரையும் குறை சொல்லவில்லை.......
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
11-அக்-201916:36:37 IST Report Abuse
Endrum Indian நான் சொல்லவா எளிய வழிமுறைகள் 1) சோனியா முதல் சைக்கோ வரை உள்ள 550 அரசியல்வாதிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்யுங்கள் அரசு கஜானாவில் சேர்ப்பியுங்கள். ரூ 125 லட்சம் கோடி தேறும். 2) இன்னும் வேண்டுமா நீரவ் மோடி முதல் சோக்சி வரை உள்ளவர்களின் (300 பேர் இருக்கும்)சொத்துக்களை பறிமுதல் செய்யுங்கள் அரசு கஜானாவில் சேர்ப்பியுங்கள் ரூ . 45 லட்சம் கோடி தேறும் 3) அரசு அதிகாரிகளாக இருக்கும்/ இருந்த அதிகாரிகளின் (65,000 பேர் இருக்கும்) சொத்து ரூ 2 கோடிக்கும் அதிகமாக உள்ளவற்றில் அரசு கருவூலத்தில் சேர்ப்பியுங்கள் ரூ . 5 லட்சம் கோடி தேறும் இதில். மொத்தம் 175 லட்சம் கோடி அரசு கஜானாவில் சேரும் அதவது 2,500,000 மில்லியன் டாலர் அதாவது 2.5 டிரில்லியன் டாலர் தேறும் செய்வீர்களா???செய்ய மாட்டீர்களா??அப்போ நாடு இதே நிலைமையில் தள்ளாடி தள்ளாடி தான் போயிட்டே இருக்கும்
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
12-அக்-201904:15:58 IST Report Abuse
Anandanஅடடா இது புது தினுசா இருக்கே. அதாவது வேலைவாய்ப்பை சரி செய்ய ஒன்னும் செய்யமாட்டீங்க, தொழில் துறை வளர ஒன்னும் செய்யமாட்டீங்க? அது சரி அதெல்லாம் உங்க ஆளுங்களுக்கு தெரிஞ்சாதானே....
Rate this:
Share this comment
Cancel
Ambika. K - bangalore,இந்தியா
11-அக்-201913:01:19 IST Report Abuse
Ambika. K எல்லாம் சரி மேடம் 4 மாசமா நாங்க லேஆஃ பில் பாதி சம்பளத்துல தடுமாறறோம். அது எப்போ சரி ஆகும் சொல்லுங்க
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
12-அக்-201904:16:18 IST Report Abuse
Anandanஇன்னும் கொஞ்ச நாளில் இது உங்களுக்கு பழகிடும்....
Rate this:
Share this comment
mohan - chennai,இந்தியா
12-அக்-201910:30:51 IST Report Abuse
mohanஆமாம் பட்டினி கிடைக்க பழகி கொள்ளலாம் .......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X