பொது செய்தி

தமிழ்நாடு

'கோ பேக்' என்பது சரியல்ல: கமல்

Updated : அக் 12, 2019 | Added : அக் 11, 2019 | கருத்துகள் (17)
Share
Advertisement
go back,kamal,கமல்,கோ பேக், சரியல்ல

சென்னை: ''நாம் தான் ஓட்டு போட்டு, 'கம்' என்றோம்; இப்போது, 'கோ பேக்' என்றால் எப்படி?'' என, நடிகர் கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில், நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சி தலைவருமான கமலை, உலக பாட்மிட்டன் சாம்பியன் பி.வி.சிந்து நேற்று சந்தித்தார். சிந்து கூறுகையில், ''கமலை நடிகராக எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன், மதிய உணவு சாப்பிட்டது, மறக்க முடியாதது,'' என்றார்.

பின், கமல் அளித்த பேட்டி: இந்தியாவுக்கு வெற்றி தேடித்தந்த இந்த வீராங்கனையை, வரவேற்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். சீனாவில் இருந்து, 60 ஆண்டுகளுக்கு பின், ஒரு தலைவர் மாமல்லபுரம் வருவது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு. இரண்டு தேசங்களுக்கும் நன்மை தரும் எந்த முடிவை எடுத்தாலும், அந்த முடிவு வெற்றி பெற வாழ்த்துகிறேன். சீன அதிபரிடம் வைக்க வேண்டிய கோரிக்கையை, நம் பிரதமர் வைப்பார். அதை திறம்பட செய்ய வாழ்த்துகிறேன்.

நாம் தான் ஓட்டுப்போட்டு, 'கம்' என்றோம். இப்போது, 'கோ பேக்' என்றால் எப்படி! நம் விமர்சனங்களை எப்போதும் போல முன் வைப்போம். அதற்கு, சட்டபூர்வமாக நடவடிக்கை எடுத்தாலும், நாம் நேர்மையாக நடப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayvee - chennai,இந்தியா
11-அக்-201916:06:13 IST Report Abuse
Jayvee தமிழ் முத்திப்போன பைத்தியம் .. இல்ல இல்ல பைத்தியம் முத்திப்போன தமிழ்.. இல்ல இல்ல முத்திப்போன தமிழ் பைத்தியம்.. இல்ல இல்ல பைத்தியம் முத்திப்போன தமிழ் பைத்தியம்
Rate this:
Cancel
V.Rajeswaran - chennai,இந்தியா
11-அக்-201915:07:22 IST Report Abuse
V.Rajeswaran நேர்மை அது முற்போக்கு ஏன் கூவும் உங்கள் கூட்டத்திற்கே தெரியாதே
Rate this:
Cancel
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
11-அக்-201914:27:21 IST Report Abuse
Nallavan Nallavan சிந்தும்மா ....... இவனை நம்பித் தனியா வராதேம்மா ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X