பொது செய்தி

தமிழ்நாடு

இன்று தனியார் நிறுவனங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்

Added : அக் 11, 2019
Advertisement

சென்னை:தமிழக அரசின் வேலைவாய்ப்பு துறை சார்பில், தனியார் நிறுவனங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம், தமிழகம் முழுவதும், இன்று நடக்கிறது.

தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில், 'வேலை வாய்ப்பு வெள்ளி' என்ற பெயரிலான வேலைவாய்ப்பு முகாம், தமிழகம் முழுவதும், இன்று காலை, 10:00 முதல், பிற்பகல், 2:00 மணி வரை நடத்தப்படுகிறது.எட்டாம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை முடித்த அனைவரும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு சென்று, முகாமில் பங்கேற்கலாம். சென்னையில், கிண்டி - ஆலந்துார் சாலையில் உள்ள, ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் முகாம் நடக்கிறது. இந்த முகாமில், 1,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு, ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த தகவலை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குனர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X