பொது செய்தி

தமிழ்நாடு

சீன அதிபருக்கு வரவேற்பு !

Updated : அக் 11, 2019 | Added : அக் 11, 2019 | கருத்துகள் (16)
Advertisement

மாமல்லபுரம்: பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையால் மாமல்லபுரம் விழாக்கோலம் பூண்டுள்ளது; கடற்கரை கோவில் நகரம் புத்தொளி வீசுகிறது. கி.பி. 7 - 8ம் நுாற்றாண்டு பல்லவர் ஆட்சிக்காலம் முதலே தமிழகம் - சீனா இடையே வணிக கலாசார தொடர்பு இருந்த நிலையில் மோடி - ஜி ஜின்பிங்கின் இன்றைய சந்திப்பு அதன் தொடர்ச்சியாகவே கருதப்படுகிறது.


கடந்த 1956ல் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவுடன் சீனாவின் முதல் அதிபர் சூ என் லாய் மாமல்லபுரம் வந்தார். அவருக்கு பின் 63 ஆண்டுகள் கடந்து தற்போதைய சீன அதிபர் ஜி ஜின்பிங் மாமல்லபுரம் வருகிறார். அதனால் பிரதமர் மோடி - சீன அதிபரை வரவேற்க மாமல்லபுரம் விழாக்கோலம் பூண்டு உள்ளது. இருவரும் கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ச்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை சிற்பங்களை கண்டு ரசிக்கின்றனர்; பின் இரு நாட்டு ஒப்பந்தங்கள் குறித்து பேசுகின்றனர்.

இதற்கிடையில் கடற்கரை கோவிலில் பாரம்பரிய கிராமிய நடனங்களையும் கண்டுகளிக்கின்றனர். இதற்காக சிற்பங்கள் பொலிவு பெற்றுள்ளன. அவர்களை வரவேற்க சிற்ப பகுதிகள் அருகில் சாலையோரம் அலங்கார வாழை தோரணங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்திய, சீன கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன. கிழக்கு கடற்கரை சாலைபகுதிகளில் கிராமிய கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர். மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் கூடி நின்று வரவேற்கின்றனர். மாமல்லபுரம் இதுவரை கண்டிராத அளவுக்கு அலங்காரமும் விழாக்கோலமும் பூண்டு இந்திய - சீன உறவிற்கு தயாராகி உள்ளது.
Advertisementசீன அதிபருக்கு மாமல்லபுரம்:


கடற்கரை கோவிலில் இன்று இரவு விருந்து அளிக்கப்பட உள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று மதியம் 1.50 மணியளவில் சென்னை வந்தார். அவரை கவர்னர் பன்வாரிலால், முதல்வர் இபிஎஸ், துணை முதல்வர் இபிஎஸ், ஆகியோர் வரவேற்றனர். விமான நிலையத்தில் தமிழக பாரம்பரிய இசை கலைஞர்கள் மேள, தாளம் முழங்கிட சீன அதிபருக்கு வரவேற்பு அளித்தனர்.
சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மதிய உணவு உட்கொள்கிறார். மாலை 4:00 மணிக்கு சாலை மார்க்கமாக மாமல்லபுரம் செல்கிறார். அங்குள்ள கடற்கரை கோவிலில் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். அப்போது இரண்டு மொழி பெயர்ப்பாளர்கள் மட்டுமே உடன் இருப்பர்.

இதைத் தொடர்ந்து அர்ச்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை ஆகிய இடங்களுக்கு இருவரும் நடந்தே செல்கின்றனர். பின் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சில் இருவரும் பங்கேற்கின்றனர். அங்கு நடக்கும் இந்திய கலாசார நிகழ்ச்சிகளையும் இருவரும் பார்வையிடுகின்றனர். கடற்கரை கோவில் வளாகத்திலேயே புல் தரையில் அமர்ந்து பிரதமரும், சீன அதிபரும் இரவு உணவு சாப்பிடுகின்றனர். இந்த விருந்தில் இந்தியாவின் பிரசித்தி பெற்ற உணவு வகைகள் இடம் பெறுகின்றன; தமிழகத்தின் பாரம்பரிய உணவுகளும் இடம் பெறும்.

மாமல்லபுரத்தில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் இருந்து இந்த உணவுகள் எடுத்து வரப்பட உள்ளன. இரவு உணவை முடித்த பின் சென்னை திரும்பும் சீன அதிபர் நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார். பிரதமர் மோடி மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இரவு தங்குகிறார். நாளை காலை நட்சத்திர ஓட்டலிலேயே சீன அதிபர் காலை உணவு சாப்பிடுகிறார். அங்கிருந்து புறப்பட்டு மாமல்லபுரம் செல்லும் சீன அதிபர் மீண்டும் பிரதமருடன் பேச்சு நடத்துகிறார். பிற்பகலில் அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் சீன அதிபருக்கு விசேஷ விருந்து அளிக்கப்படுகிறது. மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள், சீன அதிகாரிகள் குழுவுக்கும் தனித்தனியாக விருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.


3 லட்சம் பூக்கள் 1.50 டன் காய்கறிகள்!


சீன அதிபரை வரவேற்கும் வகையில் 3 லட்சம் பூக்கள் மற்றும் 1.50 டன் காய்கறிகளை பயன்படுத்தி தமிழக தோட்டக்கலை துறையினர் சார்பில் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டு உள்ளன. பிரதமர் மோடியையும் சீன அதிபரையும் வரவேற்பதற்கு தமிழக அரசு தரப்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழக கலைகளை பறைசாற்றும் வகையில் 34 இடங்களில் மேடை அமைத்து கலைநிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன. பள்ளி, கல்லுாரி மாணவர்கள் இரு நாட்டு தேசிய கொடிகள் ஏந்தி இரு நாட்டு தலைவர்களுக்கு வரவேற்பு அளிக்க உள்ளனர். தமிழக தோட்டக்கலை துறை சார்பில் விமான நிலையம் முதல் மாமல்ல புரம் வரை சாலை ஓரங்களில் பனை மற்றும் தென்னை ஓலைகளால் செய்த அலங்கார தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. சாலைகளில் ஆங்காங்கே குலைகளுடன் கூடிய வாழை மரங்களும் கட்டப்பட்டுள்ளன.

மாமல்லபுரத்தில் அர்ச்சுனன் தபசுவில் பூக்களால் அலங்கார நுழைவு அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக கிருஷ்ணகிரி கொடைக்கானல் ஊட்டி திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் இருந்து எடுத்து வரப்பட்ட 3 லட்சம் பூக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதேபோல ஐந்து ரதம் பகுதியில் 1.50 டன் காய்கறிகளை பயன்படுத்தி அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு தலைவர்களும் பேச்சு நடத்தவுள்ள கடற்கரை கோவிலின் வெளியே அலங்கார நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை வேளாண் துறை செயலர் ககன்தீப்சிங் பேடி தோட்டக்கலைத் துறை இயக்குனர் சுப்பையன் பார்வையிட்டனர்.
Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TAMILAN - new jerssy,யூ.எஸ்.ஏ
11-அக்-201920:01:07 IST Report Abuse
TAMILAN இது விளைநிலங்களை அழித்து எண்ணெய் எடுப்பதற்கான ஒப்பந்தம்.
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
11-அக்-201917:14:54 IST Report Abuse
இந்தியன் kumar நல்லது நடக்க வேண்டுமென்று விரும்புவோம் நிச்சயம் நல்லது நடக்கும் , இந்தியா உலக அரங்கில் கம்பீரமாய் நிட்கிறது , மோடிஜியின் தலைமையில் இந்தியா நிச்சயம் வல்லரசாகும்.
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - Mangaf,குவைத்
11-அக்-201916:12:34 IST Report Abuse
balakrishnan தமிழக மூர்க்கர்களை பற்றி கவலை படாமல் மோடி அவர்கள் தமிழகத்திற்கு நல்லதே செய்கிறார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X