பிரதமர் மோடியுடன் ராமதாஸ் சந்திப்பு

Added : அக் 11, 2019 | கருத்துகள் (9)
Share
Advertisement

சென்னை: பிரதமர் மோடியை, டில்லியில் அவரது வீட்டில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ஆகியோர், நேற்று சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு, 20 நிமிடம் நடந்தது. அப்போது, 'இந்திய, சீன உறவுகளை வலுப்படுத்துவது குறித்து, இரு நாடுகள் இடையேயான பேச்சு, வரலாற்று சிறப்புமிக்க, மாமல்லபுரத்தில் நடைபெறுவதால், தமிழக மக்கள் பெருமை அடைகின்றனர். இதற்காக, தமிழக மக்களின் சார்பில் நன்றி' என, பிரதமர் மோடியிடம், ராமதாஸ் கூறியுள்ளார். பின், பிரதமரிடம் அவர் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட, ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும். கோதாவரி - காவிரி ஆறுகளை இணைப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுப்படுத்த வேண்டும். தமிழகத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும். காவிரி பாசன மாவட்டங்களை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக, அறிவிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-அக்-201909:00:46 IST Report Abuse
அருணா இவர் கட்சியிலேயே ஒரு பெண்ணின் கதறல் ஒலி இன்னமும் நீடிக்கிறதே. நீங்கள் சொன்னதை நாங்களும் நம்புவது போல் நடிக்கிறோம்.
Rate this:
Cancel
sathiya narayanan - Dallas,யூ.எஸ்.ஏ
11-அக்-201907:32:54 IST Report Abuse
sathiya narayanan பசிக்குமில்ல? சங்கம் முக்கியமா சாப்பாடு முக்கியமா?
Rate this:
Cancel
natarajan s - chennai,இந்தியா
11-அக்-201907:20:18 IST Report Abuse
natarajan s இவர் ஒரு செயலில் இருங்குகிறார் என்றால் தனக்கு ஆதாயம் இல்லாமல் எதையும் செய்யமாட்டார் . தன் மகன் எவ்வளவு நாளைக்குத்தான் பசுமை தாயகத்தையே தாங்கிக்கொண்டு செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது , நாலு காசு பார்த்தால்தான் அடுத்த தேர்தலில் பென்னாகரம் போல் தாராளமாக செலவு செய்து வெற்றிக்கனியை பறிக்க முடியும் , அதெற்கு அமைச்சர் பதவி அவசியம் , அதெற்காக சீனா அதிபருடன் பேசி பதவி பெற முயற்சி அவளவுதான் . அவர் சொன்னால் இவர் கேட்பார் இல்லையா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X