பொது செய்தி

இந்தியா

காஷ்மீருக்கு வாங்க மக்களே!

Updated : அக் 12, 2019 | Added : அக் 11, 2019 | கருத்துகள் (3+ 24)
Advertisement
Kashmir,காஷ்மீர்,வாங்க மக்களே,தலைவர்கள், விடுதலை

ஸ்ரீநகர்: சுற்றுலா பயணியருக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை, ஜம்மு - காஷ்மீர் நிர்வாகம், நேற்று நீக்கியுள்ளது. சுற்றுலா வருவோருக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என, மாநில அரசு அறிவித்துள்ளது.

ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்குவதற்கான ஆயத்தமாக, ஜூன் மற்றும் ஜூலையில் சுற்றுலாப் பயணியர், அம்மாநிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். சுற்றுலா பயணியருக்கான தடையால், மாநிலத்தின் வருவாய், கணிசமாகக் குறைந்தது. தற்போது, மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பும் நிலையில், சுற்றுலாப் பயணியர், அச்சமில்லாமல் வருகை தரலாம் என்றும், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும், மாநில நிர்வாகம் கூறியுள்ளது.


3 தலைவர்கள் விடுதலை

ஜம்மு - காஷ்மீரில் அமைதி திரும்பி வரும் நிலையில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மூவரை, மாநில நிர்வாகம், நேற்று விடுவித்தது.

ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை, மத்திய அரசு, ஆகஸ்ட், 5ல் ரத்து செய்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கலவரம் மூளாமல் இருக்க, தடையுத்தரவு பிறக்கப்பட்டது. முன்னாள் முதல்வர்கள், பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி உட்பட, 400க்கும் அதிகமான தலைவர்கள், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.

இயல்பு நிலை திரும்பியுள்ள நிலையில், ஜம்முவில் தடையுத்தரவு முற்றிலுமாக நீக்கப்பட்டது; காஷ்மீரில் சில பகுதிகளில் மட்டும், தடை உத்தரவு அமலில் உள்ளது. மக்கள் மாநாட்டு கட்சி, தேசிய மாநாட்டு கட்சி தலைவர்களை, மாநில நிர்வாகம், கடந்த மாதம், 21ல் விடுவித்தது; நேற்று, மேலும் மூன்று தலைவர்களை விடுவித்தது.

'மாநிலத்தின் அமைதியை சீர்குலைக்கும் வகையில், எந்த செயலிலும் ஈடுபட மாட்டேன்' என, உறுதி அளித்து கையெழுத்திட்ட பின், மூவரும் விடுவிக்கப்பட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (3+ 24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
12-அக்-201900:00:50 IST Report Abuse
Ramesh R வாங்க - வந்து செத்த உடம்போடு போங்க
Rate this:
Share this comment
Cancel
svs - yaadum oore,இந்தியா
11-அக்-201908:16:50 IST Report Abuse
svs காஷ்மீர் அழகுதான் ...அதே போல் அல்லது அதற்கு மேல் உத்தரகாண்ட் மாநிலம் ....வெள்ளைக்காரன் காலத்திற்கு பிறகு புதிய சுற்றுலா தலங்கள் உருவாகவில்லை ....உத்தரகாண்ட தனி மாநிலமான பிறகு இப்போது பல வசதிகள் செய்துள்ளார்கள் ..... அல்மோரா , சமோலி , டெஹ்ராடூன் , நைனிடால் , முஸ்ஸோரி , பத்ரிநாத் , கேதார் நாத் , கங்கோத்ரி என்று பல இடங்கள் உண்டு.....Valley of Flowers அவசியம் பார்க்க வேண்டிய இடம் ...மலையில் பயணம் செல்ல இயலாதவர்கள் ரிஷிகேஷ் , டெஹ்ராடூன் வரையாவது சென்று வரலாம் .....
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
11-அக்-201904:17:02 IST Report Abuse
blocked user காஷ்மீரிகளுக்கு உதவவேண்டும் என்று நினைத்தால் சென்று வரலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X