பொது செய்தி

தமிழ்நாடு

படகுகளில் அதிக சக்தி இயந்திரம் உதவி இயக்குனர் உத்தரவுக்கு தடை

Added : அக் 11, 2019
Advertisement

சென்னை:மீன்பிடி படகுகளில், 240 குதிரை சக்தி திறனுக்கு அதிகம் உள்ள இயந்திரங்களை அகற்றும்படி, நாகை மீன்வளத்துறை உதவி இயக்குனர் பிறப்பித்த உத்தரவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
நாகை மாவட்டம், பழையார் கிராமத்தைச் சேர்ந்த, கோட்டையன் உள்ளிட்ட, 45 தாக்கல் செய்த மனு:எங்கள் படகுகளில், 240 முதல், 550 குதிரை சக்தி திறன் உடைய இயந்திரங்களை பயன்படுத்துகிறோம். இதை பயன்படுத்தினால் மட்டுமே, ஆழ்கடலுக்கு செல்ல முடியும்.சிறிய படகுகளை பயன்படுத்துவோர், நாங்கள் அதிக குதிரை சக்தி திறன் உடைய இயந்திரங்களை பயன்படுத்தக் கூடாது என, நாகை மீன்துறை உதவி இயக்குனரிடம் மனு அளித்தனர்.
இதையடுத்து, 240 எச்.பி.,க்கு அதிகமாக பயன்படுத்தக் கூடாது என, உதவி இயக்குனர் உத்தரவிட்டார். ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு, அதிக குதிரை சக்தி திறன் உடைய இயந்திரங்கள் தேவைப்படுகின்றன.கடலோர பகுதிகளில், நாங்கள் மீன் பிடிக்கவில்லை. இதனால், சிறிய படகுகளை இயக்குபவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்.இந்நிலையில், 240 எச்.பி.,க்கு மேல் உடைய இயந்திரங்களை அகற்றவும், இல்லையென்றால், போலீஸ் உதவியுடன் படகுகளை பறிமுதல் செய்வதாகவும், உதவி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

அதிக குதிரை சக்தி திறன் உடைய இயந்திரங்களை பயன்படுத்த உரிமம் கோரிய விண்ணப்பங்கள், நிலுவையில் உள்ளன.எனவே, மீன்வளத்துறை உதவி இயக்குனரின் உத்தரவுக்கு, தடை விதிக்க வேண்டும்.அதிக குதிரை சக்தி திறன் உடைய இயந்திரங்களை பயன்படுத்த, உரிமம் வழங்கவும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி ஆர்.சுப்ரமணியன் முன், விசாரணைக்கு வந்தது.மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜரானார். மீன்வளத் துறை உதவி இயக்குனரின் உத்தரவுக்கு தடை விதித்து, நான்கு வாரங்களில் பதில் அளிக்க, நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X