பொது செய்தி

இந்தியா

ஜி.எஸ்.டி., வருவாயை அதிகரிக்க புதிய குழுவை அமைத்தது அரசு

Updated : அக் 12, 2019 | Added : அக் 11, 2019 | கருத்துகள் (10)
Share
Advertisement
GST,Goods and Services Tax,ஜி.எஸ்.டி.,மத்திய அரசு,வருவாய், அதிகரிக்க, புதிய குழு

புதுடில்லி: ஜி.எஸ்.டி., வருவாயை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைப்பதற்காக, புதிதாக ஒரு குழுவை, மத்திய அரசு அமைத்துள்ளது.

அண்மைக்காலமாக, ஜி.எஸ்.டி., வருவாய், வசூல் இலக்கை எட்ட முடியாமல், குறைவாகவே இருந்து வருகிறது. இதையடுத்து, ஜி.எஸ்.டி., வருவாயை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து பரிந்துரைப்பதற்காக, அதிகாரிகள் மட்டத்தில், ஒரு குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

இது குறித்த அரசின் அறிவிப்பில், இந்த குழுவானது, பரந்த அளவில் சீர்த்திருத்தங்கள் குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும், அதன் மூலம், விரிவான பரிந்துரைகளின் பட்டியல் வெளிவரக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. முறைகேடுகள், தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றை தடுக்கும் வகையில், ஜி.எஸ்.டி., குறித்தான முறையான மாற்றங்கள் பற்றிய ஆலோசனைகளை குழு வழங்கும் என தெரிகிறது. மேலும், வரி தளத்தை விரிவாக்குவதற்கான ஆலோசனைகளையும் குழுவிடம் அரசு கோரி உள்ளது.

கொள்கை ரீதியான நடவடிக்கைகள், வரிச்சட்டத்தில் தேவையான மாற்றங்கள், சிறந்த நிர்வாக ஒருங்கிணைப்பு, மேம்பட்ட தரவு பகுப்பாய்வு, வரி ஏய்ப்பு தடுப்பு ஆகியவை குறித்த பரிந்துரைகளையும் இந்த குழு வழங்கும். இந்த குழுவானது, அதன் முதல் அறிக்கையை, 15 நாட்களுக்குள், ஜி.எஸ்.டி., கவுன்சில் செயலகத்தில் சமர்ப்பிக்கும்படி பணிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mohan - chennai,இந்தியா
11-அக்-201919:26:07 IST Report Abuse
mohan இந்தியாவில் ஏற்கனவே பல முறை கேடுகள்...இதில் GST என்கின்ற வலைப்பின்னல்..GST வருவதற்கு முன்னரே, தொழில் துறை சரியாய் ஆரம்பித்து விட்டது... அதாவது, இலவசங்களில்நாள், வேலை செய்வோர் எண்ணிக்கை குறைந்து விட்டது.. வேலை செய்வோர் எண்ணிக்கை குறைந்ததினால், சம்பளங்கள் பல மடங்கு, விலை வாசி எல்லாம் ஒரு சேர உயர்ந்து விட்டது.. இந்த உயர்வுக்கு ஏற்ப , விற்பனை யாகும் பொருளின் விலை கூட வில்லை... உல் நாட்டிலும் சரி, வெளி நாட்டிலும் சரி.. இந்த நிலையில் குறைவான லாபத்தோடு வியாபாரம் இயங்கி கொண்டு இருந்தது, GST வந்த பின்னர், அதன் முழு விபரம் தெரிய வில்லை, வரி விகிதம் அதிகம் என்று மட்டும் சொல்லி போராடி கொண்டு இருந்தனர்.. ஆனால், இந்தியாவில், அறுபது ஆண்டுகளுக்கு மேல், தொழில் துறை, அனைத்தும், 80 % வரை வெளி யில் இருக்கும், சிறு நிறுவனங்களை நம்பி, தங்களது தயாரிப்புகளை, நடத்தி வந்தன.. அமெரிக்காவில், ஆரம்பத்தில் தயாரான கார் கம்பெனிகள் அனைத்தும், தங்களது IN HOUSE தயாரிப்புகளாகவே இருந்தன.. அந்த மாதிரி இந்தியாவில் இல்லை. அணைத்து தொழில்களும், அரசாங்கத்தின் BHEL முதல் கொண்டு தனக்கு வெளி suplier களை கொண்டு இருந்தது.. GST வந்த பின், ஏற்கனவே குறை வான லாபத்தோடு இயங்கி கொண்டு இருந்த நிறுவனங்களின் இயங்கு மூலதன பணம், அனைத்தும் GST பின்னல் சென்று நின்று விட்டது.. அது என்பது சதவிகித நிறுவனங்களுக்கு திருப்பி வரவில்லை என்று சொல்கின்றனர்.. அது எவ்வளது தூரத்துக்கு உண்மை என்று தெரிய வில்லை... இதெல்லாம் போக... ஏன் இந்த திருப்பி தரும் முறையை தேர்ந்தெடுக்க வேண்டும்... நாட்டிற்கு வரி தேவை,,, அணைத்து முனைகளிலும், ஒரு சதவிகிதம், ஆரம்பத்தில் விதித்து விட்டு, பின்னர் படிப்படியாக தொழிலின் தன்மைக்கேற்ப வரியை அதிகரிக்கலாம்...ஒரு மகனை, அறுபது வயதான பெற்றோர், வளர்த்து டாக்டருக்கு ( GST மற்றும் தொழில் துறை ) படிக்க வைக்கின்றனர்... அந்த மகன், படித்து வெளியில் வந்து , என்ன பெற்றோரே... அறுபது வருடமாக என்ன செய்து கொண்டு இருந்தீர்கள், ஆறு மாதம் அவகாசம் தருகிறேன், நீங்கள், mbbs (GST ) படித்து மருத்துவம் பார்க்க வேண்டும்... அப்படி இல்லாவிட்டால், உங்களுக்கு சாப்பாடு கிடையாது.. வீடும் கிடையாது...நீங்கள் வெளியே போகலாம் என்று சொன்னால் அந்த பெற்றோருக்கு என்ன புரியும்.. அந்த நிலைதான் இன்றைக்கு தொழில் துறை... தொழில் துறையில் உள்ளோர் அதிக அளவில் படிக்காதவர்கள்... அது மட்டும் அல்ல...இன்றைக்கு தொழில் துறைக்கு பல்வேறு இன்னல்கள், பணியாளர்கள் மூலமாக...மற்றும் இதர இலவசங்கள் மூலமாக, இதில் லாபத்தோடு தொழில் செய்து வரி கட்டவேண்டும் என்பதே குதிரை கொம்பு... இதில் GST என்கின்ற வலை பின்னலை சரி செய்யா விட்டால், தொழில் துறை இயங்காது... ஒரு குறிப்பிட்ட தொகைக்கு கீழ் உள்ளோர்க்கு GST கிடையாது என்று சொல்கின்றனர்... அனால், அந்த குறிப்பிட்ட தொகைக்கு கீழ் உள்ள நிறுவங்கள், பெரு நிறுவனங்களில் இருந்து காசோலை வாங்கி யாக வேண்டும்... அந்த பெரு நிறுவனங்கள் எல்லாம், GST பில் தான் கேட்கின்றன.. GST பில் இல்லாவிட்டால், சிறு நிருவங்கள் தொழில் செய்ய இயலாத நிலை... எல்லாம் களைய பட வேண்டும்....இதில் கட்சியையோ, ஆட்சியை குறை சொல்ல வில்லை. மேல் மட்டத்தில் உள்ள தொழில் துறையினர் அரசுக்கு எடுத்து கூறி, இதை சரி செய்ய வேண்டும்... எல்லா முனையிலும், ஏற்றுக்கொள்ள கூடிய வழியில் வரி விதித்தால், யாரும் ஏமாற்ற போவதில்லை... சாதாரண சிறு நிறுவங்களின் முதலாளியில் இருந்து, விமானத்தில் செல்லும், பெரு நிறுவனத்தின், வட இந்தியா, தென் இந்தியா அணைத்து பெரு முதலாளிகளின் பேச்சும் இது தான்....தொழில் செய்ய முடிய வில்லை என்று... இதில் வரி வரு வாய் குறைகிறது என்றால், தொழில் நடக்க வில்லை என்று அர்த்தம்.. அர்த்தம் மட்டும் அல்ல... எந்த ஊருக்கு சென்றாலும், பல நிறுவங்கள் பெரிய பூட்டை போட்டு பூட்டி உள்ளன .. அல்லது தங்களின் கட்டிடங்களை வாடகைக்கு என்று தகவல் பலகை மாட்டி உள்ளனர்...இது எப்போது சீராவது... மிக கடினம்... மிக துரித மாக நடவடிக்கை எடுக்க வேண்டும்...இல்லாவிட்டால், என்பது சதவிகித நிறுவனங்கள் மூடும் அளவிற்கு சென்று விடும்...பின் வரி வருவாய் அதற்கேற்றாற் போல் தான் இருக்கும்...
Rate this:
Cancel
K.P SARATHI - chennai,இந்தியா
11-அக்-201912:51:44 IST Report Abuse
K.P  SARATHI GST கட்டுவதற்குள் அதனுடைய INPUT CREDIT அனுமதிப்பதால்தான் FORGERY INVOICE முறைகேடு நடைபெறுகிறது. மேலும் gst 5 % ஆகா குறைத்து input credit தவிக்கவேண்டும். இதனால் உண்மையான வருமானம் கிடைக்கும். 18 % வாங்கி அதனை திருப்பி கொடுப்பதால் அரசங்கதிக்கு எப்படி வருமானம் கிடைக்கும்
Rate this:
Cancel
S.V.SRINIVASAN - Chennai,இந்தியா
11-அக்-201912:01:53 IST Report Abuse
S.V.SRINIVASAN GST வரி வருவாயையை அதிகரிக்க நடவடிக்கைகளை எடுக்க ஒரு குழு அமைத்து அந்த குழுவில் உள்ளவர்களுக்கு மாத சம்பளம் கொடுப்பது என்பதெல்லாம் வீண் விரயம். GST வரியை ஒழுங்காக செலுத்தாதவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த, வரி ஒழுங்காக கட்டாதவர்களுக்கு இரண்டு மடங்கு வரி அபராதம் போன்ற கடுமையான நடவடிக்கைகளை குறிப்பாக CORPORATE முதலைகளுக்கு இது போன்ற நடவடிக்கைகளை நிறைவேற்றினால் போதும். வரி வசூல் உயர வாய்ப்புள்ளது. எந்தவிதமான வர்த்தகமும் செய்யாமல்FORGERY iINVOICE தயார் செய்து ITC CLAIM செய்வது போன்ற சட்ட புறம்பான வேலைகள் செய்யும் நபர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுத்தாலே வரி வசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X