பொது செய்தி

தமிழ்நாடு

இந்தியா - சீனா பேச்சில் இடம் பெறுவது என்ன?

Added : அக் 11, 2019
Advertisement
 இந்தியா - சீனா பேச்சில் இடம் பெறுவது என்ன?

சென்னை:''அதிவேக புல்லட் ரயில்கள் இயக்கம், ரயில்வே சிக்னல்களில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல் போன்றவை குறித்து, இந்தியா - சீனா பேச்சில் இடம்பெற வாய்ப்புள்ளது,'' என, ஜவஹர்லால் நேரு பல்கலை பேராசிரியர் ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீனா அதிபர்ஜி ஜின்பிங் சந்திப்பு, மாமல்லபுரத்தில் இன்று நடக்கிறது.இந்த நிலையில், விவேகானந்தா சர்வதேச அறக்கட்டளை மற்றும் சாஸ்த்ரா பல்கலை இணைந்து, இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு தொடர்பான, சாதகமான சூழல்கள் குறித்து, கலந்துரையாடல் நடத்தினர்.நிகழ்ச்சியில், ஜவஹர்லால் நேரு பல்கலையின், சீன கல்வித்துறை பேராசிரியர், ஸ்ரீகாந்தி கொண்டபள்ளி பேசியதாவது:இரு தலைவர்கள் சந்திப்பில், இந்தியா - சீனா இடையிலான எல்லை பிரச்னைகள், பொருளாதார நடவடிக்கைகள் குறித்து, பேச வாய்ப்பு உள்ளது.மேலும், இந்திய பொருட்களுக்கு, சீனாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. அதனை தளர்த்தக் கோரி, 2010 முதல் கோரிக்கை விடுக்கப்படுகிறது. இந்தியாவிலிருந்து சீனாவுக்கு, 19 லட்சம் பேர் சுற்றுலா சென்றுள்ளனர். ஆனால், சீனாவிலிருந்து, 3 லட்சம் பேர் மட்டுமே இந்தியா வந்துள்ளனர்.

எனவே, சுற்றுலா மேம்பாடு குறித்தும், விவாதிக்க வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவில் அதிவேக புல்லட் ரயில்கள் இயக்குதல், ரயில்வே சிக்னல்களில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல் மற்றும் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டங்கள் குறித்தும் பேச வாய்ப்பு உள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.இந்த கலந்துரையாடலில், விவேகானந்தா சர்வதேச அறக்கட்டளை இயக்குனர் அர்விந்த் குப்தா, இந்தியாவின் முன்னாள் துாதர் ரங்காச்சாரி உட்பட, பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X