பொது செய்தி

தமிழ்நாடு

தீபாவளி, 'சரக்கு' விற்பனைக்கு இலக்கா?: 'டாஸ்மாக்' நிறுவனம் எச்சரிக்கை

Added : அக் 11, 2019
Advertisement

'தீபாவளியை முன்னிட்டு, விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக, வதந்தி பரப்புவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, 'டாஸ்மாக்' நிர்வாகம் எச்சரித்துள்ளது.

ரூ.150 கோடிதமிழக அரசின், டாஸ்மாக் நிறுவனம், சில்லரை மதுக்கடைகள் வாயிலாக, பீர் மற்றும் மதுபான வகைகள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.அந்த கடைகளில், தினமும் சராசரியாக, 80 கோடி ரூபாய்க்கும்; வார விடுமுறை நாட்களில், 100 கோடி ரூபாய்க்கும் மது வகைகள் விற்பனையாகின்றன.ஆங்கில புத்தாண்டு, பொங்கல், தீபாவளி போன்ற விசேஷ நாட்களில், மது விற்பனை, 150 கோடி ரூபாயை தாண்டுகிறது. வரும், 27ம் தேதி, தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இலக்கு
இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:தீபாவளிக்கு, இவ்வளவு கோடி ரூபாய்க்கு கட்டாயம் மது விற்பனை செய்ய வேண்டும் என, எந்த இலக்கும், ஊழியர்களுக்கு நிர்ணயிக்கப்படவில்லை.சிலர், 250 கோடி ரூபாய் - 500 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்ய, இலக்கு நிர்ணயித்து உள்ளதாகவும்; அதற்காக, கட்டாயப்படுத்தி விற்பதாகவும், புகார்கள் வருகின்றன. இது, முற்றிலும் தவறான தகவல். மது விற்பனைக்கு ஏற்ப, உடனுக்குடன் கடைகளுக்கு, மது வகைகள் சப்ளை செய்யப்படும்.இயல்பான விற்பனை எவ்வளவோ, அது ஏற்கப்படும். எனவே, டாஸ்மாக் நிறுவனம் மீது, மக்களிடம் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில், தவறான தகவல் மற்றும் வதந்தி பரப்பும் ஊழியர்கள் மீது, கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X