திருப்புல்லாணி:-வீடுகளில் நடக்கும் திருட்டைதடுக்கவும், வரும் முன் காப்போம் நடவடிக்கையாக திருப்புல்லாணி அருகே தினைக்குளம் அரசு மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் மணிவண்ணன் புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.
தனது கண்டுபிடிப்பு குறித்து ஆசிரியர்மணிவண்ணன் கூறியதாவது: குடியிருப்புகள், ஆள் நடமாட்டம் இல்லாத தெருக்களில் வசிப்போர் வெளியூர் செல்லும் போது, வீட்டின் பீரோவில் உள்ள விலை உயர்ந்த நகைகள், ஆவணங்கள், மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்படுவதை தடுப்பதற்கானஅலர்ட் அலைபேசியை கண்டுபிடித்துள்ளேன்.
வெளியூர் செல்லும் நிலையில் வீட்டின் கொல்லைப்புறம், முன்பக்கம், பீரோ, பாதுகாப்பு பெட்டகம்ஆகியவற்றில்இக்கருவியை பொருத்தினால்,முகம் தெரியாத மர்ம நபர்களின் கைவரிசைக்கு முன்பாக வீட்டின் உரிமையாளரின் அலைபேசிக்கு இந்த கருவிஎச்சரிக்கை அலாரம் எழுப்பி விடும்.இதன் மூலம் கொள்ளை நடப்பதை தடுக்க முடியும்.
இந்த கருவியில் சர்க்கியூட், ஒரு சிம்கார்டு,ஆன்ட்ராய்டு அலைபேசி,சார்ஜர் பேட்டரி இவைகளைக் கொண்டு உருவாக்கியுள்ளேன். மர்ம நபர்கள் பீரோவை திறந்தால் சென்சார் மூலம் உரிமையாளரின் அலைபேசிக்கு எச்சரிக்கை ஒலியும், அவர் அதை ஏற்காவிட்டால் அவருக்கு வேண்டிய நபருக்கும், அருகில் வசிப்போருக்கும்,போலீசாருக்கும்உடனே அலாரம் ஒலிக்கும்.
தற்போது வீடுகளில்பொருத்தப்படும் சி.சி.டி.வி., கேமராக்களைப் போன்று இதற்கும் தற்போது தேவை ஏற்பட்டுள்ளது. 7000 ரூபாய் மதிப்பீட்டில் இக்கருவியை தயாரித்துள்ளேன்.இனி வருங் காலங்களில் கூடுதல் நவீன உத்திகளுடன்தயாரிக்க உள்ளேன். முன்னாள் மாணவர் ராம்குமார் இதற்கு உதவி உள்ளார் என்றார். தலைமையாசிரியர் ராமச்சந்திரன், தினைக்குளம் ஜமாஅத் பொறுப்பாளர்கள், கிராம மக்கள் ஆசிரியர் மணிவண்ணனின் கண்டுபிடிப்பை பாராட்டினர்.