அரசியல் செய்தி

தமிழ்நாடு

மேகதாது அணை விவகாரம் மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்

Added : அக் 11, 2019
Share
Advertisement

சென்னை:'காவிரியின் குறுக்கே, மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு, கர்நாடகாவுக்கு அனுமதி வழங்கக் கூடாது' என, மத்திய அரசுக்கு, முதல்வர் இ.பி.எஸ்., கடிதம் எழுதிஉள்ளார்.

மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோருக்கு, முதல்வர் இ.பி.எஸ்., எழுதியுள்ள கடிதம்: கர்நாடக அரசு, காவிரியின் குறுக்கே, மேகதாது அணை கட்ட திட்டமிட்டுள்ளது.இது, காவிரி நடுவர் மன்றத்தின், இறுதி தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது.

மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு எதிராக, தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, நிலுவையில் உள்ளது. ஜூலையில் நடந்த, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின், மதிப்பீட்டு குழு கூட்டத்தில், கர்நாடக அரசு தாக்கல் செய்த, மேகதாது அணை குறித்த வரைவு அறிக்கை நிராகரிக்கப்பட்டு உள்ளது. மீண்டும், வரைவு அறிக்கைக்கு அனுமதி பெற, மதிப்பீட்டு குழுவிடம், கர்நாடக அரசு முறையிட்டு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கர்நாடக அரசின், இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தின் அனுமதி பெறாமல், காவிரியில் எங்கும் அணை கட்டுவதற்கு, கர்நாடக அரசுக்கு உரிமையில்லை. எனவே, கர்நாடக அரசு, மேகதாது அணை கட்டுவதற்கு, மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது.இவ்வாறு, கடிதத்தில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X