பொது செய்தி

தமிழ்நாடு

பாலைவனமாகிறது வைகை கடைமடைப்பகுதி : வைகை ஆற்றுக்குள் தேவை குடிமராமத்து :ஆயக்கட்டு விவசாயிகள் ஏக்கம்

Updated : அக் 11, 2019 | Added : அக் 11, 2019 | கருத்துகள் (1)
Advertisement
பாலைவனமாகிறது வைகை கடைமடைப்பகுதி : வைகை ஆற்றுக்குள் தேவை குடிமராமத்து  :ஆயக்கட்டு விவசாயிகள் ஏக்கம்

ராமநாதபுரம்:வைகை அணையின் கடை மடைப் பகுதியான ராமநாதபுரம் மாவட்ட விவசாயநிலங்கள் யாவும் பாலை வனமாக மாறி வருகிறது.

குடிமராமத்து பணிகளில்கண்மாய்களை துார் வாரினால் மட்டும் போதாது. கண்மாய்களுக்கான நீர் வரத்து கால்வாய்கள்,காணாமல் போன வைகை ஆற்றில் செயல்படுத்த வேண்டும், என விவசாயிகள் ஏக்கம் தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 லட்சத்து 8,957 எக்டேர் பரப்பளவில் மணல், களிமண், மணல் சார்ந்த களிமண், வண்டல் மண், மணல் சார்ந்த குறுமண், கடலோர வண்டல் மண், செம்மண் பரப்புகளை கொண்டுள்ளது. சாகுபடிக்கு ஏற்ற மண் 54 சதவீதமும், 29 சதவீதம் அமில மண், மிதமான காரத்தன்மை உடைய மண் 12 சதவீதம் உள்ளன. இங்கு நெல், கடலை, பருத்தி, தென்னை, மிளகாய், கொத்தமல்லி, எள், தானியங்கள், பயறு வகைகள் பயிர் செய்யப்படுகின்றன.

மாவட்டத்தில் 2.5 லட்சம் எக்டேரில் சாகுபடி நடக்கிறது. ஆண்டு தோறும் மழையளவு குறைந்து கொண்டே வருகிறது. ஆண்டு சராசரி மழையளவு 827 மி.மீ., கடந்த ஐந்து ஆண்டுகளாக மழையளவு குறைந்து வருகிறது.


பொய்த்துப்போன விவசாயம்ராமநாதபுரம் மாவட்டத்தில் வைகை பாசனத்தின் மூலம் கண்மாய்கள் நிறைக்கப்பட்டு
விவசாயம் நடந்த காலம் மலையேறி வருகிறது. வைகை பாசனத்தில் மட்டும் 54 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன்பெற்று வந்தது. வைகை அணையில் போதுமான நீராதாரம் குறைந்து வருகிறது. இதனால் கடை மடைப் பகுதியானராமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்று வரை கானல் நீராகவே உள்ளது. இதனால் இங்கு விவசாய நிலங்கள் தரிசாகி, பாலைவனங்களாக மாறி வருகின்றன.


வைகை ஆற்றில் மணல் கொள்ளை

வைகை ஆற்றில் மழை இல்லாத நாட்களில் மணலில் ஊற்று இருக்கும். வைகை கரையோர விவசாயிகள் ஆழ்துளை கிணறு அமைத்து விவசாயம் செய்து வந்தனர். மணல் மாபியாக்களால் இங்கு மணல் கொள்ளையடிக்கப்பட்டு வைகை ஆறு முழுவதும் மணல் காடாக இருந்தது. வறண்ட பாலைவனமாக சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. கழிவு நீர் வடிகால் பகுதியாக வைகை ஆறு மாறிவிட்டது.


குடிநீருக்கு தட்டுப்பாடுராமநாதபுரம் மாவட்டத்தில் வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு 7 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. குடிநீருக்காகவும், நிலத்தடி நீர் மட்டத்திற்காகவும், கால்நடைகள் பயன்பாட்டிற்கும் ஆண்டு தோறும் ராமநாதபுரம் பெரிய கண்மாய் பகுதிக்கு தண்ணீர் கொண்டு
செல்லப்பட்டு வருகிறது. இதன் மூலம் வறண்டு கிடக்கும் கணமாய்கள், ஊரணிகள், நீர்
நிலைகள் மட்டுமே நிரப்பப்பட்டு, குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்படும் நிலைஉள்ளது.


குடிமராமத்து பணிகள்குடிமராமத்து பணிகளில் 69 பொதுப்பணித்துறை கண்மாய்கள், 224 சிறு கண்மாய்கள் துார் வாரும் பணிகள் நடக்கிறது. இந்தப்பணிகள் யாவும் கண்துடைப்பாகவே நடக்கின்றன.கண்மாய்களை மட்டும் துார் வாரினால் போதுமா. கண்மாய் வரத்து கால்வாய்கள் துார் வார வேண்டும். வரத்து கால்வாய்களை துார்வாரினால் மட்டுமே கண்மாய்களுக்கு மழை நீர் வரத்து கிடைக்கும். துார் வாரியும் பயனில்லாத நிலை ஏற்படும்.


வைகை கடைமடை பாலை வனமாகும்வைகை ஆறு பாச்சலுார் மதகணையில் இருந்து ராமநாதபுரம் பெரிய கண்மாய் வரை 45 கி.மீ., நீளமுள்ள வைகை ஆற்றுப்பகுதிகளில் நீக்கமற சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. மணல் கொள்ளையர்களால் ஆங்காங்கே ஆற்றுக்குள் பெரும் பள்ளம் ஏற்பபட்டுள்ளது. சீமைக்கருவேல மரங்களை அகற்றி வைகை பாசனத்தில் உள்ள இடது, வலது கால்வாய்களை சீரமைக்கும்பணிகளை குடிமராமத்து பணி மூலம் செயல்படுத்த அரசு முன் வர வேண்டும்.

அப்படி செய்தால் மட்டுமே ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்கள் பாதுகாக்கப்படும், பாசன பகுதிகளை முறைப்படுத்த முடியும். இதை செயல்படுத்த தவறினால் வைகை கடைமடை பகுதியான ராமநாதபுரம் மாவட்டம் பாலை வனமாக மாறும் அவல நிலை உள்ளது.

மதுரை வீரன், ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் சங்கத்லைவர்: வைகை ஆற்றில் சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமித்து, புதர் மண்டியுள்ளது. இதனால் பாச்சலுார் முதல் ராமநாதபுரம் பெரிய கண்மாய் வரையுள்ள 45 கி.மீ., துாரம் சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளது. வலது கால்வாயில் வேணுநாதஉடையார் கால்வாய் மூலம் 18 கண்மாய்கள், செல்லுார் கால்வாய் மூலம் 4 கண்மாய்கள், களரி கண்மாய், ராமநாதபுரம் பெரிய கண்மாய், கமுதக்குடி உட்பட 37 கண்மாய்கள், கூத்தன்கால்வாய் மூலம் 37 கண்மாய்கள் உள்ளன.

இடது கால்வாயில் சாலை கிராமத்து கால்வாயில் 20 கண்மாய்கள், மேல நாட்டார் கால்வாய் மூலம் 20 கண்மாய்கள், ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய், கீழ நாட்டார் கால்வாய் மூலம் 15 கண்மாய்கள் நிறையும். இதன் மூலம் 54 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும். குடிமராமத்து பணிகள் கண்துடைப்பாக உள்ளது. கண்மாய் மட்டுமே துார் வாரப்படுகின்றன. வரத்துக்கால்வாய்கள் துார் வாராமல் கண்மாய்கள் எப்படி நிறையும்.

பாசனத்திற்கு முக்கியமான வைகை ஆற்றில் குடிமராமத்துப்பணிகள் மூலம் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு, நீர் வரத்து ஏற்பட வழி செய்ய வேண்டும்.வைகை ஆற்றை நம்பியுள்ள சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளை அரசு புறக்கணித்து வருகிறது. இங்குள்ள விவசாயிகளுக்கு வேறு மாற்று தொழில்களும் இல்லாத நிலை உள்ளது. முதுகுளத்துார், கமுதி, கடலாடி பகுதிகளில் 151 கண்மாய்களை நிறைத்து வளப்படுத்திய மலட்டாறு, குண்டாறு ஆகிய இரண்டும் ரகுநாத காவிரி, நாராயண காவிரி ஆறுகளை துார் வார அப்பகுதி விவசாயிகள் 15 ஆண்டுகளுக்கும் மேல் அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இன்று வரை அப்பணிகள் செய்யப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இனியாவது அரசு நடவடிக்கை எடுத்து வைகை ஆற்றை சீரமைக்க வேண்டும்.

ஆர்.கணேசன், பாண்டியூர் விவசாயி: ராமநாதபுரம் மக்கள் வைகை ஆற்று நீரில் விவசாயம் செய்து பல ஆண்டுகளாகிவிட்டது. தடுப்பணைகள் முழுவதும் மணல் கொள்ளையர்களால் சேதம் அடைந்துள்ளது. ஷட்டர்கள் சேதமடைந்து, கால்வாய்கள் துார்ந்து போய் உள்ளன. விவசாயிகள் விவசாயத்தை கைவிட்டு மாற்று தொழிலுக்கு வெளி மாவட்டங்களுக்கு செல்லும் நிலை உள்ளது.

நாகேஸ்வரி 37, பாண்டியூர் விவசாய கூலி தொழிலாளி: மழை சீசன் நேரங்களில் விவசாய வேலைகள் அதிகம் இருக்கும். இப்போதெல்லாம் விவசாயம் குறைந்து நெல் விதைப்பு இல்லாமல் போனது. தற்போது குறுகிய கால பயிர்களான காய்கறிகள், மிளகாய், சிறு தானியங்கள் மட்டுமே பயிரிடப்படுகிறது. விவசாய கூலி தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகள் இல்லாத
நிலை ஏற்பட்டுள்ளது.

செல்வராணி, விவசாயி, பாண்டியூர்: வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 7 ஆண்டுகளாகிறது. ஆண்டுதோறும் குடிநீருக்காக மட்டுமே பெரிய கண்மாய் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. விவசாய பணிகளுக்காக தண்ணீர் கிடைக்கவில்லை. தடுப்பணை, வரத்துக்கால்வாய் பகுதிகளில் முட்புதர் மண்டி நீரவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துகிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வைகை ஆற்றை சுத்தம் செய்து, விவசாய பாசனத்திற்கு பயன்பட செய்ய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-அக்-201911:48:02 IST Report Abuse
ஆப்பு தோ... கோதாவரி தண்ணி வந்துக்கிட்டே இருக்கு. அது வரலேன்னா, மேகதாதுவில் அணைகட்டி நேரா நமக்கு தண்ணீர் இணைப்பு குடுத்திருவாங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X