பொது செய்தி

தமிழ்நாடு

3 லட்சம் பூக்கள், 1.50 டன் காய்கறிகளான அலங்கார வளைவு

Updated : அக் 11, 2019 | Added : அக் 11, 2019
Advertisement
 3 லட்சம் பூக்கள், 1.50 டன் காய்கறிகளான அலங்கார வளைவு

3 லட்சம் பூக்கள்; 1.50 டன் காய்கறிகள்!சீன அதிபரை வரவேற்கும் வகையில், 3 லட்சம் பூக்கள் மற்றும் 1.50 டன்காய்கறிகளை பயன்படுத்தி, தமிழகதோட்டக்கலை துறையினர் சார்பில்,அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டு உள்ளன.

பிரதமர் மோடியையும், சீன அதிபரையும் வரவேற்பதற்கு, தமிழக அரசு தரப்பில், பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழக கலைகளை பறைசாற்றும்வகையில், 34 இடங்களில் மேடை அமைத்து, கலைநிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன. பள்ளி, கல்லுாரி மாணவர்கள், இரு நாட்டு தேசிய கொடிகள் ஏந்தி, இரு நாட்டு தலைவர்களுக்கும் வரவேற்பு அளிக்க உள்ளனர். தமிழக தோட்டக்கலை துறை சார்பில், விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை, சாலை ஓரங்களில் பனை மற்றும் தென்னை ஓலைகளால் செய்த அலங்கார தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. சாலைகளில், ஆங்காங்கே குலைகளுடன் கூடிய வாழை மரங்களும் கட்டப்பட்டுள்ளன.மாமல்லபுரத்தில், அர்ச்சுனன் தபசுவில், பூக்களால் அலங்கார நுழைவு அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, கிருஷ்ணகிரி, கொடைக்கானல், ஊட்டி, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் இருந்து எடுத்து வரப்பட்ட, 3 லட்சம் பூக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதேபோல, ஐந்து ரதம் பகுதியில், 1.50 டன் காய்கறிகளை பயன்படுத்தி, அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு தலைவர்களும் பேச்சு நடத்தவுள்ள, கடற்கரை கோவிலின் வெளியே, அலங்கார நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை, வேளாண் துறை செயலர்ககன்தீப் சிங் பேடி, தோட்டக்கலைத்துறை இயக்குனர் சுப்பையன், நேற்று பார்வையிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X